Tamil News
Home செய்திகள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்; சம்பந்தன் சார்பிலும் மனு

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்; சம்பந்தன் சார்பிலும் மனு

பாராளுமன்றத்தில் அரசு சமர்ப்பித்துள்ள இருபதாவது திருத்தத்துக்கு எதிராக இது வரை ஆறு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் எம். பியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸவின் மக்கள் ஐக்கிய சக்தி உட்பட ஆறு தரப்புகள் நேற்று பிற்பகல் வரை மேற்படி இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தை ஆட்சேபித்து வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

இரா.சம்பந்தன் மற்றும் மாற்றுக் கொள்கைக்கானமையம் ஆகியவற்றின் சார்பில் சட்டத்தரணி மோகன் பாவேந்திரா உயர் நீதிமன்றத்தில் நேற்று இந்த மனுக்களைத் தாக்கல் செய்தார்.

இரா.சம்பந்தனின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரனும், மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னிலையாகிவாதிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த விடயத்தை ஒட்டிமனுக்கள் தாக்கல் செய் யப்படலாம் என்றும், இன்னும் ஆறுக்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றும்தெரியவந்தது.

Exit mobile version