Home உலகச் செய்திகள் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – (மேலும் பல முக்கிய செய்திகள்)

அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – (மேலும் பல முக்கிய செய்திகள்)

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 54 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இது வரையில் 7 கோடியே 44 இலட்சத்து 84 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா – 3,14,371,பிரேசில் – 1,83,822,இந்தியா – 1,44,096,மெக்சிகோ -1,15,099,இத்தாலி – 66,537,இங்கிலாந்து – 65,520,பிரான்ஸ் – 59,361,ஈரான் – 52,883, ஸ்பெயின் – 48,596,  ஆகியன  கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாடுகடத்தப்பட்ட நிலையில், தாக்குதலுக்குள்ளான வங்கதேசி

Image may contain: one or more people

வங்கதேசத்தில் உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த Samad Howladar பப்பு நியூ கினியாவில் செயல்பட்ட அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சுமார் 5 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

இவரது தஞ்சக்கோரிக்கையை நிராகரித்த பப்பு நியூ கினியா குடிவரவு அதிகாரிகள், இவரை 2018ம் ஆண்டு அவரது விருப்பத்துக்கு மாறாக நாடுகடத்தியிருக்கின்றனர்.

இந்த சூழலில், சமீபத்தில் Samad Howladar வங்கதேசத்தில் உள்ள தனது அரசியல் எதிரிகளால் தாக்கப்பட்டுள்ளதாக கார்டியன் ஊடகம் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதில் மகிழ்ச்சி: ஈரான்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவது மகிழ்ச்சியாக உள்ளது என ஈரான் அதிபர் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசுத் தொலைக்காட்சியில் அதிபர் ஹசன் ரவ்ஹானி கருத்து தெரிவிக்கையில், “ஈரான் அதிபராக ஜோ பைடன் பதவியேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றாலும், டொனால்ட்  ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சாது ஒருவர் தற்கொலை

டெல்லி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்தில் சீக்கியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அவருக்கு வயது 65.

தற்கொலை செய்து கொண்ட பாபா ராம் சிங், ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த குருதுவாராவைச் சேர்ந்த சாது என தெரிவிக்கப்படுகின்றது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட பாபா ராம் சிங் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். அரசுக்கு எதிரான கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்த தன் உயிரை தியாகம் செய்துள்ளதாக தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version