Tamil News
Home உலகச் செய்திகள் அடுத்து வரும் வைரஸ் தொற்றை சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

அடுத்து வரும் வைரஸ் தொற்றை சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்றை அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அடினோம் ஜெப்ரேயல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று உலகின் கடைசித் தொற்று நோய் அல்ல. உலகெங்கும் உள்ள நாடுகள் எதிர்கால நெருக்கடிகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் எந்வொரு பிரச்சினையையும் நாம் எளிதாக சமாளிக்க முடியும். இதற்காக, அனைத்து நாடுகளும் சுகாதாரத்துறையில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

தொழில்நுட்பங்கள் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், பல நாடுகள் இன்னும் தங்கள் சுகாதார முறைகளை சரியாக பயன்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அனைத்து நாடுகளும் சுகாதாரத்துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

மார்ச் 11இல் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை உலக தொற்று நோயாக அறிவித்தது.  செப்டெம்பர் 07ஆம் திகதி வரை 890,000இற்கும் அதிகமானோர் இந் நோய்த் தொற்றால் இறந்துள்ளனர். அத்துடன் அமெரிக்காவிற்கு அடுத்ததாக தற்போது இந்தியாவிலேயே தொற்று அதிகம் உள்ளது.

Exit mobile version