Home உலகச் செய்திகள் வேளாண் சட்ட எதிர்ப்பு-முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

வேளாண் சட்ட எதிர்ப்பு-முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

இந்திய மத்திய அரசு  கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 8ம் திகதி அகில இந்திய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு பாரதிய கிசான் சங்கம் என்ற விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த்தோடு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்தச் சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,” எங்களுடைய போராட்டத்தை தற்போதைய நிலையில் இருந்து மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். மத்திய அரசு தனது 3 சட்டங்களையும் திரும்ப் பெறும்வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம், என்றார்.

இதற்கிடையே, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு திமுக, இடதுசாரி கட்சிகள் உள்பட 8 எதிர்கட்சிகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version