Home செய்திகள் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்களின் பயண தடை தொடர்பில் படைத் தளபதியிடம் எடுத்துரைப்பு

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்களின் பயண தடை தொடர்பில் படைத் தளபதியிடம் எடுத்துரைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட படையினரின் சோதனை நிலையம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதியிடம் முல்லை ஊடக அமைய தலைவர் ச.தவசீலன் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

189603402 751719755496210 7290948574349762924 n முல்லைத்தீவில் ஊடகவியலாளர்களின் பயண தடை தொடர்பில் படைத் தளபதியிடம் எடுத்துரைப்பு

முள்ளியவளையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்வும் வீதியில் 03 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள படையினரின் வீதி சோதனை நிலையத்தில் கடந்த 20.05.21 ஆம் திகதி தொடக்கம் வீதி ஊடக பலர் தங்களை அடையாளப்படுத்தி சென்றபோதும் ஊடகவிலயார்கள் தங்களை அடையாளப்படுத்தியபோதும் அதில் நின்ற படையினரால் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த ஊடகவியாலாளர்கள் பலர் செய்தி சேகரிக்க செல்லமுடியாத நிலை காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏனைய இடங்களில் ஊடகவியலாளர்கள் தங்கள் அடையாளத்தினை உறுதிப்படுத்தி வீதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்ட போதும் 03 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள வீதிச்சோதனை நிலையம் தொடர்பில் 23.05.21 இன்று நிகழ்வு ஒன்றிற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரால் உப்புல் ராஜபக்ச அவர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.

இதன் பின்னர் குறித்த படையினரின் வீதிச்சோதனை நிலையம் ஊடாக ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version