Tamil News
Home உலகச் செய்திகள் நிவர் புயலையடுத்து இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி –  சில முக்கிய தகவல்கள்

நிவர் புயலையடுத்து இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி –  சில முக்கிய தகவல்கள்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகயில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீற்றர் வேகத்திலும் வீசக்கூடும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தழ்வுப்பகுதி, மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2ஆம் திகதி தென் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30, டிசம்பர் 01 மற்றும் டிசம்பர் 02 ஆகிய திகதிகளில் சூறாவளிக் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் டிசம்பர் 2ம் திகதி வரை கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மேலதிக விவரங்களை அறிய imdchennai.gov.in இணையதளத்தை காணவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Exit mobile version