Tamil News
Home செய்திகள் தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு இன்று 28.11.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில்,

‘உல்’ என்பது ஓர் பழந்தமிழ் வேர்ச்சொல். இதற்குச் ‘சுற்றுதல், சுழல்தல், உருள்தல்’ என்பன வேர்ப்பொருள்கள்.

‘உல் -> உர் -> உருள் -> உருளை’, ‘உருளை -> உருடை’ என்ற சக்கரம் குறிக்கும் சொற்கள் வரலாறும் இவ்வேரிலிருந்துதான் உருவாகின. தமிழில் சக்கரத்தினைக் குறித்த சொல் பிறகு அச் சக்கரத்தினை உடைய வண்டியினையும் குறித்துள்ளது.

‘உருடை’ என்ற தமிழ்ச்சொல், தெலுங்கில் ‘ரோட’ என்று திரிந்துள்ளது. இலத்தீனில், ‘rota’ என்ற சொல் சக்கரத்தினையும் வண்டியினையும் குறிக்கின்றது. இவ்வுண்மையைப் பாவாணர் ஆய்ந்து விளக்கியுள்ளார்.

பாவாணர் வழியில், முனைவர்  கு.அரசேந்திரன் இலத்தீனின் ‘Rota’, சமற்கிருதத்தில் ‘Ratha’ வாகியதைக் கண்டறிந்தார். மேலும் இந்த ஐந்தாம் சொற்பொழிவில் கீழை, மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் சக்கரம் (wheel), ஊர்தி (vehicle), இயங்குதல் (move) தொடர்பான சொற்கள் பலவும் எவ்வாறு மூலமொழியாகிய தமிழிலிருந்து தோன்றிப் பரவியுள்ளன என்பதனை   ஒப்புநோக்குச் சான்றுகளால் விளக்குகிறார் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள்.

அவுஸ்திரேலியா நேரம்: இரவு  22:00 மணி (AEST)

மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST)

இந்தியா / இலங்கை நேரம் : மாலை  17:30 மணி (IST)

இங்கிலாந்து நேரம்: பிற்பகல் 13:00 மணி (BST)

அமெரிக்கா நேரம்: காலை 08:00 (EST) காலை 07:00 (CST)

நேரலை: FaceBook: facebook.com/NostraticTamil

சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம்.

FaceBook: facebook.com/NostraticTamil

Twitter: twitter.com/NostraticTamil

Website: nostratictamil.com

YouTube: youtube.com/c/NostraticTamil

Exit mobile version