Tamil News
Home உலகச் செய்திகள் நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

அல்பேனியாவில் தலைநகர் திரானாவிலிருந்து சுமார் 18 மைல்கள் தூரம் உள்ள ஷிஜக் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் அல்பேனியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத, மோசமான அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டுரஸ் நகரில் பல கட்டிடங்கள் முற்றிலுமாகச் சரிந்து காணப்படுகின்றன.

நிலநடுக்கத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என்றும் நிலநடுக்கத்துக்கு 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின்போது காணாமற்போனவர்களை தேடும் பணியும், கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், மீட்புப் பணியில் ஐரோப்பியாவிலுள்ள பிற நாடுகள் உதவி இருப்பதாக அல்பேனியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் வீடுகள் நிலநடுக்கத்தினால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக அல்பேனிய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version