Tamil News
Home உலகச் செய்திகள் உலக நாடுகளில் 30,000 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ; ஏற்றுமதியில் சீனா முதலிடம்

உலக நாடுகளில் 30,000 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ; ஏற்றுமதியில் சீனா முதலிடம்

உலகில் 95 நாடுகள் தங்கள் படையணியில் ஆளில்லா விமானங்களை இணைத்துக்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள ஆளில்லா விமானங்கள் குறித்த கற்கைநெறிக்கான நிலையம் உலக நாடுகளின் இராணுவங்கள் ஆளில்லா விமானங்களை அதிகளவிற்கு பயன்படுத்த தொடங்கியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆளில்லா விமானங்கள் குறித்த தனது புதிய ஆய்விலேயே ஆளில்லா விமானங்கள் குறித்த கற்கைநெறிக்கான நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை மாத்திரம் அதிகரிக்கவில்லை அவற்றிற்கான தளங்கள் , அவற்றை பரிசோதனை செய்வதற்கான தளங்கள் பயிற்சி கல்லூரிகளும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி காணாத நாடுகளும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என குறிப்பிட்ட அறிக்கையை தயாரித்த டன் கெட்டிங்கர் தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானங்கள் சர்வதேச விவகாரங்களில் அதிகளவு முக்கியத்துவத்தை பெற தொடங்கியுள்ளன சமீபத்தைய சவுதி அரேபிய விவகாரம் இதனையே புலப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியா ஈரான் ஆகியநாடுகளின் வான்பரப்பில் எட்டு நாடுகளின் ஆளில்லா விமானங்கள் காணப்படுகின்றன என புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

சில வருடங்களிற்கு முன்னர் அமெரிக்காவே ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் சோமாலியா  போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தியது தற்போது அந்த சாதகதன்மை குறைவடைந்துள்ளது என புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால் தற்போது நைஜீரியா அஜர்பைஜான்  உட்பட பத்து புதிய நாடுகள் ஆளில்லா விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனாவே அதிகளவு டிரோன்களை ஏற்றுமதி செய்கின்றது அதற்கு அடுத்தபடியாக இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிகளவிற்கு ஏற்றுமதி செய்கின்றன எனவும் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகநாடுகளில் இராணுவத்தினர் வசம் 30,000ற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் இருக்கலாம்,எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

 

Exit mobile version