Tamil News
Home உலகச் செய்திகள் உலகின் மிகப்பெரிய  ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது

உலகின் மிகப்பெரிய  ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

கம்போடியாவில் இதுவரை 3028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம்  23 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கம்போடியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதை தடுக்க அந்த நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும்  இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பயணிகளும்  வந்து வழிபாடுகளில் ஈடுபடுவது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version