Home செய்திகள் இந்தியாவின் இராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது மகிந்த ராஜபக்ஸ

இந்தியாவின் இராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது மகிந்த ராஜபக்ஸ

இந்தியாவின் இராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்திருக்கவே முடியாது என சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவில் வைத்து கூறியுள்ளார்.

4நாட்கள் விஜயமாக இந்தியா சென்றுள்ள மகிந்த ராஜபக்ஸ, டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் அவர் சாரநாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும் பயணம் மேற்கொள்கின்றார். இந்திய பயணம் தொடர்பாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளேட்டிற்கு மகிந்த ராஜபக்ஸ அளித்த நேர்காணலிலேயே மேற்படி கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். ஆகையால் இந்தியா, பாகிஸ்தானுடன் இது தொடர்பாக விவாதிக்கின்றோம். இந்தியாவும், பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு உதவி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் பாகிஸ்தான் அளித்தது. இந்தியாவும்கூட இலங்கைக்கு உதவி செய்தது. ஆனால் அதை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை.rajapakse modi12112133 1581215360 இந்தியாவின் இராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது மகிந்த ராஜபக்ஸ

இந்தியாவின் உதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என நினைக்கவில்லை. இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியா முன்னரே எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அப்போது இலங்கையில் இருந்த அரசு இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றோம். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இந்தியாவின் உள் விவகாரங்களில் ஒருபோதும் தலையிடமாட்டோம்.

எங்களுடன் நட்பாக இருக்கும் நாடுகளுக்கு ஒவ்வொரு பார்வை இருக்கலாம். ஆனால் இந்திய விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. ஏனெனில் இந்தியா எங்களின் உறவு நாடு. மற்றவை நட்பு நாடுகள். இதைத்தான் பலமுறை குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றேன். யுத்தத்தால் இலங்கை மிக மோசமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது.

ஆகையால் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது. இதற்கு சீனா உதவ முன்வரும் போது அதை நாங்கள் தவிர்க்க முடியாது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நாங்கள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றோம். இதற்காகவே நிதியையும் ஒதுக்கியிருக்கின்றோம். வளர்ச்சியை விரும்பவில்லை. அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றே அவர்கள் பேசி வருகின்றனார். இவ்வாறு மகிந்த ராஜபக்ஸ கூறினார்.

Exit mobile version