Home உலகச் செய்திகள் அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவி

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவி

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ, லாரன் பவல் ஜாப்ஸ், பிரையன் ஷெத் இணைந்து ‘எர்த் அலையன்ஸ்’ என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை கடந்த மாதம் தொடங்கினர். இந்த அமைப்பு அமேசானை பாதுகாக்கும் வகையில் உதவிகளை செய்ய அமேசான் வன நிதியம் என்ற பெயரில் நிதி திரட்டி வருகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி உதவி தொகை அமேசான் காடுகளைப் பாதுகாக்க தீவிரமாக பணியாற்றிவரும் 5 உள்ளூர் அமைப்புகளுக்கு போய் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்கட்டமாக 50 லட்சம் டாலரை நன்கொடையாக அளித்து நிதி திரட்டும் பணியை டிகாப்பிரியோ தொடங்கி வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் காணப்படும் பருவநிலை மாற்றங்களுக்கான தீர்வாக அமேசான் மழைக்காடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமேசான் இல்லாமல் நாம், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

rainforests amazan அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவிபூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. தீயை அணைக்கும் பணியில் பிரேசில் படைகளுடன் பிற உலகநாடுகளும் உதவி செய்து வருகின்றன.

Exit mobile version