உலக சாதனை படைத்த நடனக் கலைஞர்கள்

IMG 4845 உலக சாதனை படைத்த நடனக் கலைஞர்கள்

இலங்கையில் உள்ள கலைஞர்கள் உட்பட பலநாட்டுக் கலைஞர்கள் இணைந்து ZOOM வழியாக நடாத்திய நிகழ்வு உலக சாதனையாக பதியப்பட்டுள்ளது.

இரண்டாவது தடவையாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு உலக சாதனையாக பதியப்பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டும் இவ்வாறான உலக சாதனையொன்றும் படைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2019ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கின்னஸ் சாதனை முயற்சிக்காக சுமார் 10,000 நடனக் கலைஞர்கள் நடேசனுடைய புகழை விளக்கும் வண்ணம் நடேச கௌத்துவத்தினை ஒரே நேரத்தில் நடனமாடினார்கள். இதில் பல்வேறுபட்ட இந்திய மாவட்டம், மாநிலம், நாடுகளிலிருந்தும் பல நடனக் கலைஞர்கள் பங்கு பற்றியிருந்தனர். இந் நிகழ்வினை பத்மா சுப்ரமணியம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

IMG 4888 உலக சாதனை படைத்த நடனக் கலைஞர்கள்

பல நாடுகளில் இருந்தும் பங்கு பற்றிய மாணவர்களுள் எமது இலங்கை திரு நாட்டிலிருந்து மட்டக்களப்பு மண்ணிலிருந்து திருமதி வசந்தி நேரு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிருத்திய கலாலய ஆசானாகிய திருமதி வசந்தி நேரு அவர்கள் உட்பட அவர்களுடைய  6 மாணவர்கள் பங்கு கொண்டு உலக சாதனை பெற்று மண்ணுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்து கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவிட் நிதியத்திற்கான நிதியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அதுமட்டுமன்றி கோவிட் அசாதாரண காலகட்டத்திலும்   விரிவரங்க நிகழ்கலையினூடாக(ZOOM ) கலைமணி மதுரை சு. முரளிதரன் அவரின் நெறியாழ்கையின் கீழ் பல நாட்டு கலைஞர்கள் கலந்துகொண்ட நடன நிகழ்வு நடாத்தப்பட்டது.

IMG 4896 உலக சாதனை படைத்த நடனக் கலைஞர்கள்

இந்த உலக சாதனை நடன நிகழ்விலும் மட்டக்களப்பினை சேர்ந்த நிருத்திய கலாலய ஆசிரியரும், முனைவர் பட்ட ஆய்வாளருமான திருமதி வசந்தி நேரு அவர்கள் உட்பட அவருடைய மாணவிகளான (டானி ருக்ஷிக்கா மோசஸ் சஞ்சுலா ராஜேந்திரம், ஆனந்தசேகர் ரம்யா, ராமுசங்கர் ரஜித்ரா, லோகநாதன் நிரோஷனா, ரவிந்ரகுமார் ரக்ஷிதா, சுவர்ண சந்திரண் சாருண்யா, பத்மசிறி கிஷானி, பிரான்சிஸ் தர்ஷிக்கா, தியாகராஜன் அபிராஷினி, அருட்செல்வன் அக்ஷனா, கார்த்திகா தேவானந், சுரேஷ்குமார் கிஷோனியா ஷான்ருக்ஷி, கேதாரணி முருகதாஸ்) ஆகிய 14 மாணவர்களும் பங்கு கொண்டனர்.

இந்த நடன நிகழ்வானது கின்னஸ்  உலக சாதனை பதிவேட்டில் பதியப்பட்டு மீண்டும் உலக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-143-august-15-2021