உலக இதய நாள் இன்று -இலங்கையில் ஆண்டுதோறும் இதய நோயால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரிப்பு

உலக இதய நாள்

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், வருடம் தோறும் உலக இதய நாள்  நினைவு கூரப்படுகின்றது.

‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதயபூர்வமாக இணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக இதய நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையில் வருடாந்தம் 45,000 பேர் இதய நோயினால் உயிரிழப்பதாக இலங்கை இருதய நோய் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர், இதய நோய் விசேட வைத்திய நிபுணர் அனிந்து பத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் இதய நோய்களிலிருந்து தம்மைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு மட்டும் இதய சார்ந்த நோய்களால் உலகளவில் 17.9 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021