உலகின் பாதுகாப்பு செலவீனம் 2.24 றில்லியன் டொலர்களை எட்டியது

கடந்த வருடத்திற்கான உலகின் பாதுகாப்பு செலவீனம் 2.24 றில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

இது 3.7 விகித அதிகரிப்பாகும். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு செலவீனங்களும் கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அதிக உயர்வைக்கண்டுள்ளது என the Stockholm International Peace Research Institute (SIPRI) நிறுவனம் இந்த வாரம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு செலவீனமே மொத்த செலவீனத்தில் 56 விகிதத்தை பிடித்துள்ளது. இதில் அமெரிக்கா 35.7 விகிதத்தையும், சீனா 13.8 விகிதத்தையும், ரஸ்யா 3.5 விகிதத்தையும் கொண்டுள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு செலவீனம் 3.9 விகிதமாகும். உக்ரைன் போரை தொடர்ந்து ஐரோப்பாவின் பாதுகாப்பு செலவீனம் 13 விகிதமாக அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு செலவீனம் தொடர்ந்து அதிகரிப்பது என்பது நாம் ஒரு பாதுகாப்பற்ற உலகில் வாழ்கின்றோம் என்பதை காட்டுகின்றது என இந்த நிறுவனத்தின் ஆய்வாளர் நான் ரியான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பதற்றமே இந்த அதிகரிப்புக்கு காரணம் மத்திய ஐரோப்பாவின் பாதுகாப்பு செலவீனம் 345 பில்லியன் டொலர்களாகும். இது 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 30 விகிதம் அதிகமாகும்.