Home செய்திகள் பாலியல் குற்றச்சாட்டு: சாட்சிகளை மறைக்கும் முயற்சியில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர்

பாலியல் குற்றச்சாட்டு: சாட்சிகளை மறைக்கும் முயற்சியில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர்

விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு மாற்றப் பட்டசெங்லடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவருக்கு  எதிரான சாட்சிகளை இல்லாமல் செய்யும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்கள் உட்பட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள், காணி ஊழல் குற்றச்சாட்டுக்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் அவரை உடனடியாக விசாரணைக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு கடந்த 22 ம் திகதி அமைச்சில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் படி செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் தற்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் வலுவாக உள்ள நிலையில், அவரை பாதுகாப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில அரசியல் வாதிகள், அரச உயர் அதிகாரிகள், மண் மாபியாக்கள்  அவருக்கு ஆதரவாக மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மிக முக்கியமான செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குற்றம் சாட்டியவர், மற்றும் சாட்சிகளை விலை கொடுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

கோடி என்ற நபரின் ஊடாக பல கோடிகளை வழங்கி பிரதேச செயலாளருக்கு எதிராக காவல்துறை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு பாலியல் புகார் செய்த பெண்ணை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை விட குறித்த சம்பவத்திற்கு எதிராக சாட்சிகள் வழங்கிய நபர்கள் மீது அரச நிர்வாக ரீதியாக பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பிரதே செயலாளரின் இடைத்தரகர் ஒருவர் தொலைபேசயில் பேரம் பேசி ஒலி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 பாலியல் குற்றச்சாட்டு: சாட்சிகளை மறைக்கும் முயற்சியில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர்

Exit mobile version