Home உலகச் செய்திகள் உதவிகள் இல்லையேல் வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும்

உதவிகள் இல்லையேல் வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும்

வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும்

கடன்களுக்கான மீள்செலுத்தும் தொகை தொடர்பில் ஜி-20 நாடுகள் உதவிகளை வழங்காது விட்டால், வறிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கும், பல நாடுகள் முற்றான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என அனைத்துலக நாணய நிதியம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

கடன்களுக்கான மீள் செலுத்தும் தொகைகளை நிறுத்தி வைப்பதற்கான கால எல்லை இந்த வருடத்தின் இறுதியுடன் முடிவடைகின்றது. அதனை நீடிக்காது விட்டால், பல நாடுகள் அழிவைச் சந்திக்கும் என அதன் தலைவர் கிறிஸ்ரலீனா ஜொஜிவா தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 வைரசின் புதிய வடிவம் விரைவாக பரவுகின்றது. இந்த நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கின்றது, இது வறிய நாடுகள் மீது அதிக பொருளாதார அழுத்தத்தை கொடுக்கும். எனவே அவர்களுக்கான கடன் உதவிகள் வழங்கப்பட வேண்டும். இதனை பெறுவதற்கு 73 நாடுகள் தகுதியானவை.

வறிய நாடுகளின் கடன் சுமை கடந்த ஆண்டு 12 விகிதத்தால் உயர்ந்துள்ளது இது 860 பில்லியன் டொலர்களாகும். 60 விகிதமான குறைந்த வருமானம் உள்ள நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version