கோவிட் – 19 வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?

கோவிட் – 19 நோயில் இருந்து குணாகிவிட்ட பின்பும் சிலருக்கு,  இந்த வைரஸ் தாக்குதல் தொடர்ந்து இருப்பது பின்னர் நடந்த சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவினால், சாதாரண சளியைப் போல நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இந்த விஷயத்தில் இந்த வைரஸ் எப்படி மாறுபட்டது என்ற கேள்வி எழுகின்றது.

70 வயதைக் கடந்த ஆண் ஒருவர், மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்றுக்கு ஆரம்ப கட்ட உதாரணமாக இருக்கும் நோயாளி. அதிர்ச்சிகரமான, கவலைதரக் கூடிய இந்த விஷயம் அவர் மூலமாகத்தான் மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது.

அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, பரிசோதனையில் கண்டறியப்பட்ட பிறகு கடந்த பிப்ரவரி மாதம் டோக்கியோ மருத்துவமனையில் தனிமை வார்டில் அவர் வைக்கப்பட்டு பின் குணமடைந்துவிட்டதாக ஜப்பானின் செய்தி ஒளிபரப்பு நிறுவனம் என்.எச்.கே. வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

ஆனால் சில வாரங்கள் கழித்து, அவருக்கு  மறுபடியும் காய்ச்சல் வந்திருந்தது. எனவே அவருக்கு  மருத்துவ சோதனைகள் செய்த போது, மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பானில் இந்த நிலையில் இருப்பது அவர் மட்டுமல்ல. கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கிய நோயாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கிறது என்றாலும், கணிசமான எண்ணிக்கையாக உள்ளது.

முதலில் கோவிட்-19 பரிசோதனையின் போது, நோய் அறிகுறிகள் இல்லை என அறியப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 14 சதவீதம் பேருக்கு வேறொரு சமயத்தில் நடைபெறும் சோதனையின் போது, நோய் அறிகுறி கண்டறியப்படுகிறது என்று ஸ்பானிய தேசிய பயோடெக்னாலஜி மையத்தின் நச்சுயிரியல் நிபுணர் லூயிஸ் என்ஜுவானெஸ், பிபிசியிடம் கூறியுள்ளார். இது இரண்டாவது தாக்குதல் அல்ல என்றும், வைரஸ் “ முதல் வைரஸ் தொற்றே திருப்பித் தாக்கும்” நிகழ்வு என்றும் அவர் நம்புகிறார்.

நன்றி – பிபிசி