பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா விருப்பம்

பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த

பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா விருப்பம்

அனைத்துலக நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கேட்டுள்ளதை வரவேற்றுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் விக்ரோரியா நியூலாட், மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கும் அமெரிக்கா ஆதரவு நல்கும் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (22) பயணம் மேற்கொண்ட அவர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் உட்பட பல அரசியல் தலைவர்களைச் சந்தித்திருந்தார்.

இலங்கை ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளபோது நாம் வந்துள்ளோம், நீங்கள் எமது முக்கிய தரப்பு, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் கேந்திர  முக்கியத்துவம் உங்களுக்கு உண்டு எனவே எந்த நெருக்கடியிலும் நாம் உங்களுக்கு உதவுவோம் என விக்ரோரியா தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவும், அமெரிக்காவும் எடுத்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் மாதம் வோசிங்டனில் இடம்பெறும் அனைத்துலக நாணய நிதியத்தின் கலந்துரையாடலில் அமெரிக்கா இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டுவர முயற்சிக்கும் என அவை மேலும் தெரிவித்துள்ளன.