‘மாவீரர் துயிலும் இல்லங்களிற்கு முன்னால் ஏன் படையினர்’ – சபையில் சிறிதரன் கேள்வி

மாவீரர் துயிலும் இல்லங்களிற்கு முன்னால்

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டவுடன், மாவீரர் துயிலும் இல்லங்களிற்கு முன்னால் படையினரை குவித்து, மாவீரர் துயிலும் இல்லங்களை மறைப்பதன் மூலம், தமிழர்கள் அவர்களின் வீரப்புதல்வர்களை மறக்கக்கூடிய சூழ்நிலை வருமா அல்லது சிங்களவர்கள்தான் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா என  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

“2016 – 2018 வரை மட்டுமன்றி 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட மாவீரர் தினத்தை விளக்கேற்றி நினைவு கூர்ந்தார்கள்  எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை.  ஆனால்  தற்போதுதான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.  இதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு மட்டுமே கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.