‘நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்’-பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள்

நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். நீங்கள் பிழை அற்றவர்கள் எனில் அதை பயமின்றி உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைக்கு வாருங்கள் என்றே கேட்கிறோம் என இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

2022 இற்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  உரையாற்றுகையில்,

“இனப்படுகொலை என்பது வெறுமனே மக்களை கொல்வது மட்டும் அல்ல. அந்த மக்களை மக்களின் அடையாளத்தை முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்குடன் செய்யப்படுபவையும் இனப்படுகொலையே.

இறுதி யுத்ததின் போது வன்னியில் ஏறத்தாழ நான்கு லட்சத்யுக்கு அதிகமான மக்கள் இருப்பதாக பதிவுகள் இருந்தபோதும் அரசு, ஆக 70,000 பேருக்கே உணவும் மருந்தும் அனுப்பி மக்களை பட்டினி போட்டு சாகடிக்க முனைந்தது , இதுவும் இனப்படுகொலையே.

2009 மே 16 ஆம் திகதி மாலை போர்வலயத்தில் அகப்பட்டிருக்கும் மக்களின் உயிரை பாதுகாப்பதற்காக தம்து ஆயுதங்களை மெளனிக்கிறோம் என விடுதலை புலிகள் பகிரங்கமாக அறிவித்த பிறகும், கண்மூடித்தனமாக காட்டுமிராண்டித்தனமாக மக்கள் மீது கடும் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது . இதை கடந்த தடவை சரத் பொன்சேகாவும் ஒத்துக்கொண்டிருந்தார்.

யுத்தம் புரிகின்ற் மறுதரப்பு யுத்தத்தை நிறுத்தி ஆயுதங்களை மெளனித்த பிறகு நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் அந்த 150,000 மக்களையும் கொல்லும் நோக்குடனேயே ( intention ) நடந்தது. இது இனப்படுகொலையே.

இப்படி மக்கள் மீது தாக்குதல் நடப்பது குறித்து விடுதலைப்புலிகள் என்னிடம் அறிவித்தார்கள். அதை நான் அப்போது பேச்சில் ஈடுபட்டிருந்த பஸில் ராஜபக்சவுக்கு அறிவித்து அத்தாக்குதலை நிறுத்துமாறு கேட்டிருந்தேன். அவர் பாதுகாப்பு அமைச்சோடு கதைத்துவிட்டு , அப்படி செய்ய முடியாது என பாதுகாப்பு அமைச்சு சொன்னதாக கூறினார். இதற்கு நான் சாட்சி.

நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். நீங்கள் பிழை அற்றவர்கள் எனில் அதை பயமின்றி உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைக்கு வாருங்கள் என்றே கேட்கிறோம். யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளின் பின்னரும் தம்ழிஅர் வாழ்விடங்களில் பெருந்தொகை இராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது . வன்னியில் 5:1 எனும் விகிதத்தில் இராணுவம் இருக்கிறது.  உண்மை வெளிவந்துவிடும் என  இராணுவத்தை குவித்து வைத்திருகிறீர்கள்?

தமிழர்கள் யாருக்க்கும் எதிரிகள் அல்ல, அவர்கள் யாருடனும் போர் புரிய விரும்பவும் இல்லை.அவர்கள் கேட்பதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளை மட்டும் தான். இந்த நாடு பல் தேசமுள்ள நாடு என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.அப்போதுதான் நீடித்த சமாதான்ம் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad 'நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்'-பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்