Home உலகச் செய்திகள் கொரோனாவின் மூலத்தைக் கண்டறிய மீண்டும் உலக சுகாதார அமைப்பு முயற்சி

கொரோனாவின் மூலத்தைக் கண்டறிய மீண்டும் உலக சுகாதார அமைப்பு முயற்சி

மீண்டும் உலக சுகாதார அமைப்பு முயற்சி


கொரோனா வைரஸ் தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்காக மீண்டும் உலக சுகாதார அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது.

உலகளவில் 239,963,626 போ் கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 4,889,877 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் உலகளவில் கொரோனா வைரஸ்தொற்று குறைவடைந்து வருகின்றது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கான புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது.

கொரோனா எங்கு தோன்றியது என்பதைக் கண்டறிவதற்கான இறுதி  முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய நோய்க்கிருமிகளின் மூலத்திற்கான அறிவியல் ஆலோசனைக் குழுவில் (Scientific Advisory Group on the Origins of Novel Pathogens) 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தை அல்லது ஆய்வகத்தில் இருந்து இது பரவியதா அன்று இந்தக் குழு ஆராயும்.

ஆய்வகத்தில் இருந்து பரவியதாகக் கூறப்படும் கூற்றை சீனா கடுமையாக மறுத்து வருகிறது.

Exit mobile version