எங்கே எங்கள் இரண்டு ஆட்சி/தேசிய மொழிகள்? மனோ கணேசன் கேள்வி

எங்கே எங்கள் இரண்டு ஆட்சி

இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர்  ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றில் எந்த குறிப்போ விளம்பங்களோ இடம்பெறாதது  பல கேள்விகளை எழுப்பியுள்ளது . இதன் மூலம் சீன மொழியின் ஆதிக்கம் இலங்கை மண்ணில் ஓங்குகிறதா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“எங்கே எங்கள் இரண்டு ஆட்சி/தேசிய மொழிகள்? அல்லது துறைமுக நகர் முழுமையாக சீனாவின் சொத்தா? எமது 65 நட்புறவை இப்படிதான் கொண்டாடுவதா? யாருக்கு பொறுப்பு, அக்கறை..? ஒருவருக்கும் வெட்கமில்லை..! தேசத்திடம் மன்னிப்பு கோருங்கள்..!”