‘அவர்கள் சொல்வது பொய்’ – தொலைக்காட்சி செய்தி நேரலையில் NO WAR பதாகையுடன் நுழைந்த ரஷ்ய பெண் பத்திரிகையாளர்

அவர்கள் சொல்வது பொய்

நேற்று 19வது நாளை எட்டிய நிலையில், ரஷ்ய பெண் பத்திரிகையாளரின் போருக்கு எதிரான துணிச்சலான குரல் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.நேற்று மாலை ரஷ்யாவின் பெர்வி கானால் எனும் அரசு தொலைக்காட்சியில் வழக்கம்போல் நேரலையாக செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு பதாகையுடன் இளம் பெண் பத்திரிகையாளர் வந்து நின்றார்.

அந்தப் பதாகையில் கையால் ரஷ்ய,  உக்ரைன் தேசியக் கொடிகள் வரையப்பட்டிருந்தன. கூடவே ரஷ்ய மொழியில், போர் வேண்டாம். போரை நிறுத்தங்கள். போலிப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். அவர்கள் சொல்வது பொய். இங்கிருந்து உங்களிடம் பொய் சொல்கிறார்கள். ரஷ்யர்களுக்கு போரின் மீது விருப்பமில்லை என்று எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் NO WAR என்றும் எழுதப்பட்டிருந்தது.

மேலும் அந்தப் பெண் போர் வேண்டாம் என்று கோஷமிட்டார். இதனால் நேரலையில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில விநாடிகளில் பின்னால் இருந்த ஃப்ரேம் மாற்றப்பட்டது.