வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர்; கோட்டாபய வகுக்கும் திட்டம் என்ன? – அகிலன்

கோட்டாபயவகுக்கும் திட்டம் என்னவடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமிப்பதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எடுத்த முடிவுக்கு தமிழர் தரப்பிலிருந்து உருவா கியிருக்கும் கடுமையான எதிர்ப்பு அரசாங்கத்தின் தீர்மானத்தை மாற்றியமைக்குமா? இதுதான் தமிழ் அரசியல் பரப்பில் தற்போது உருவாகியிருக்கும் முக்கியமான கேள்வி யாகும். 

வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர்;கோட்டாபய ராஜபக்‌ஷ வகுக்கும் திட்டம் என்ன?

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல், மக்களால் தெரிவு செய்ய ப்பட்ட ஒரு நிர்வாகம் இல்லாதிருக்கும் நிலையில், ஆளுநரும், பிரதம செயலாளருமே மாகாண நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில், தமக்குத் தேவையான வகையில் மாகாண நிர்வாகத்தை நடத்துவதற்கு பிரதம செயலாள ரையே அரசாங்கம் நம்பியிருக்க வேண்டியிருக்கின்றது. தனக்கு ஏற்ற ஒருவரை மாகாண பிரதம செயலாளராக நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  நிர்வாகம் முடிவெடுத்தமையின் பின்னணி இதுதான்!

வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர்
வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர்

பிரதம செயலாளராக நியமிக்கப்படுவதற்குத் தகுதியான பன்னிரெண்டு தமிழ் அதி காரிகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஆறு பேர் குறிப்பிட்ட பதவியைப் பெறுவதற் கான முயற்சிகளை இறுதி வரையில் முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள். இதில் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்த தகவல் களும் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால், இறுதியில் சமன் பந்துலசேன என்ற சிங் கள அதிகாரி இந்தப் பதவிக்கு அவசர – அவசரமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜப க்‌ஷ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

காரணம் என்ன?

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.சார்ள்ஸ் கடமையாற்றுகின்றார். அவர் பணி மாற்றப்படலாம் எனச் சொல்லப்பட்ட போதிலும், அவரது பதவியில் கைவைக்காமல் பிரதம செயலாளரை மாற்றும் செயற்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் கைகளில் எடுத்தமைக்கு பல காரணங்கள் உள்ளன. காரணம் என்ன?

முதலாவதாகஆளுநர் ஏதோ ஒருவகையில் ஜனாதிபதியின் இலக்குகளை அடைவதற்குத் துணை புரிபவராகவே இருக்கின்றார். அவருக்கு அழுத்தங்களைக் கொடுத்து தமக்குத் தேவையான வகையில் செயற்படுத்த முடியும்.
இரண்டாவதாகஆளுநரை மாற்றி சிங்களவர் ஒருவரை நியமிப்பது சர்வதேச ரீதி யாக கவனத்தைக் கவர்வதாக அமைந்துவிடும். மேற்குலகின் அழுத்தங்களை யும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், அதில் கைவைப்பதை அரசா ங்கம் தவிர்த்துக் கொண்டது.
மூன்றாவதாகவடமாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் ஒன்றும் இல்லாத நிலையில், பிரதம செயலாளர் யாருடைய கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஜனாதிபதியின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய ஒருவராகச் செயற்பட முடியும்.
நான்காவதாகமாகாண மட்டத்தில் மீள்குடியேற்றம், காணி விவகாரம் போன்ற பல்வேறு விடயங்களையும் செயற்படுத்துபவராக – கட்டுப்படுத்தக் கூடியவராக பிரதம செயலாளரே இருப்பார் என்பதால், தமக்கு ஏற்ற ஒருவரை பிரதம செயலாளர் பதவியில் வைத்துக் கொள்வது அவசியம் என ஜனாதிபதி கருதியிரு க்கலாம்.
சிங்கள அதிகாரி

போர் முடிவுக்கு வந்து விட்ட பின்னரும் கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளு நர்களாக படை அதிகாரிகள் அல்லது சிங்கள அதிகாரிகளை நியமிப்பதையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் வழமையாகக் கொண்டிருந்தது. இருந்த போதிலும் சர்வதேச ரீதியாக உருவாகியிருந்த விமர்சனங்களைத் தவிர்ப்பத ற்காகவே வடமாகாண ஆளுநராக சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். அதனைவிட வவு னியா, திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் அரசாங்க அதிபர்க ளாக சிங்களவர்களை நியமிக்கும் வழமையையே அரசாங்கம் கொண்டிருக்கின்றது.

கிழக்கு மாகாண ஆளுநராகவும் சிங்கள அதிகாரி ஒருவரே பதவியில் இருக்கின்றார். கிழக்கின் ஆளுநராக ஜனாதிபதியால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நியமிக்க ப்பட்ட சிங்கள அதிகாரி அனுராதா யகம்பந்த் என்ற சிங்களப் பெண்மணி, கோட் டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாகக் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்த ‘வியத்மக’ என்ற சிங்கள புத்திஜீவிகள் அமைப்பின் முக்கியஸ்த்தரா வார். அதாவது – அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்குத் தேவையான வகை யில் அவர் செயற்படுவார் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் பதவியை அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொடுத்தார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் அவர் அரசின் இலக்கு களை அடைவதற்கான செயற்பாடுகளைச் சிறப்பாக முனெடுக்கின்றார் என்பதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. கிழக்கின் மேய்ச்சல் தரை விவகாரம் போன்றன உட்பட, சிங்கள மயமாக்கல் திட்டங்கள் பலவற்றை செயற்படுத்துபவராக அவரே உள்ளார்.

வடமாகாணத்தைப் பொறுத்தவரை ஆளுநராக தமது பொம்மையாகச் செயற்படக் கூடிய ஒருவரை வைத்துக்கொண்டு பிரதம செயலாளர் மூலமாக தமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுதான் அரசின் திட்டம். மாகாண சபைகளின் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், பிரதம அதிகாரி சக்தி வாய்ந்த ஒருவராகவே இருப்பார்.

தமிழ் மண்ணில் பிரதம செயலாளராகத் தமிழ் தெரிந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். இம் மாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் மொழியறியாத ஒருவரை நியமித்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களை ஜனாதிபதி அவமதித்துள்ளார், வஞ்சித்து ள்ளார். தனது அரசியலுக்கு முதல் இடமும் மக்களின் பிரச்சனைகளுக்குக் கடை இட மும் அளித்துள்ளார்

சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது, பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த விஜயலக்ஷ்மி என்ற பெண் அதிகாரியுடன் அவர் அடிக்கடி மோத வேண்டியிருந்தது. தன்னுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் அவர் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார் என சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டி வந்திருந்தமை நினைவிருக்கலாம். பின்னர் குறிப்பிட்ட அதிகாரி பதவி மாற்றம் செய்யப்பட்டார் என்பது வேறு கதை! ஆனால், முதலமைச்சருக்கே சவால் விடக்கூடிய வகையில் பிரதம செயலாளரால் செயற்படக் கூடியதாக இருந்திருக்கின்றது என்ப துதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

வடக்கில் அரசின் உபாயம்

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், அரசாங்கம் தமது இலக்கை அடையக் கூடிய வகையிலான செயற்பாடுகளில் பெருமளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணம்தான் அரசுக்குச் சவாலான விடயமாக இருந்தது. வடக்கின் சனத்தொகையில் 75 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தமிழர்களாக இருப்பதால், ஆளு நர், பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள் போன்றவர்கள் பெருமளவுக்குத் தமிழர் களாகவே இருந்தார்கள். ஆனால், வடக்கின் ஐந்து அரசாங்க அதிபர்களில் இருவ ரையாவது சிங்களவர்களாக வைத்திருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்ட மாக இருந்தது.

இப்போது பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவரை அரசாங்கம் நியமித்திருக்கும் நிலையில், வடமாகாணத்தில் சிங்கள மயமாக்கல் திட்டங்கள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படலாம். குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தாமதப்படுத்தி வரும் நிலையில், தமக்கு ஏற்ற ஒருவரை மாகாண பிரதம செயலாளராக நியமித்திருப்பது நன்கு திட்டமிட்ட செயலாகவே இரு க்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் களத்தில் இறங்கியிருக்கின்றன. வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவசரமாகச் சந்தித்து இது தொட ர்பில் விரிவாக ஆராய்ந்திருக்கின்றார்கள். வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் உறுப்பினர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழ்க் கட்சிகள் தீர்மானம்

கோட்டாபயவகுக்கும் திட்டம் என்னஇதன்போது இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பும் தீர்மா னம் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்ட த்தில் 13 பேர் நேரில் சமுகமளித்து ஜனாதிபதி க்கு அனுப்பும் கடிதத்தில் ஒப்பமிட்டனர். 14 பேர் தொலைபேசி மூலமாக இந்தக் கடிதத்துக்கு ஆதரவைத் தெரிவித் தனர்.

நிர்வாக மொழியான தமிழ் மொழியைக் கொண்ட வடக்கு மாகாண சபையில் மக் களினதும், அதிகாரிகளினதும் தொடர்பாடல் கருதி இப் பதவிக்குப் பொருத்தமான தமிழ் அதிகாரிகளில் ஒருவரை நியமித்து உதவுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாண சபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேற்கொண்டுள்ள தீர்மானம், அவரின் பௌத்த-சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பி னருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

“தமிழ் மண்ணில் பிரதம செயலாளராகத் தமிழ் தெரிந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். இம் மாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் மொழியறியாத ஒருவரை நியமித்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவமதித்துள்ளார், வஞ்சித்து ள்ளார். தனது அரசியலுக்கு முதல் இடமும் மக்களின் பிரச்சனைகளுக்குக் கடை இடமும் அளித்துள்ளார்” எனவும் சி.வி.விக்னேஸ்வரன் அங்கு குற்றஞ் சாட்டியிருந்தார்.

அரசாங்கத்தின் இந்த நியமனம் தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒற்றுமைப்படுத்தியுள் ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அவசர கடிதம், கண்டன அறிக்கைகள் என தமிழ்க் கட்சிகள் சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கியுள்ளன. அவர்களுடைய அரசியலுக்கும் அது தேவை தான். ஆனால், தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைக்காக தனது காலடிகளை பின்னால் எடுத்து வைக்கும் ஒருவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இருப்பாரா?