புட்டீன் அடுத்து என்ன செய்யப்போகின்றார்? | வேல் தர்மா

புட்டீன்
இலக்கு மின்னிதழ் 171 | ilakku Weekly ePaper 171

புட்டீன் அடுத்து என்ன செய்யப்போகின்றார்?

உக்ரேனை புட்டீன் இரசியாவுடன் இணைக்கப்போகின்றாரா? உக்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றாரா? உக்ரேனை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய விடாமல் தடுக்கப் பார்க்கின்றாரா? இக்கேள்விகளுக்கான விடை அவருக்கு மட்டுமே தெரியும். போர் அபாயத்தில் இருக்கும் நாடு ஒன்றை நேட்டோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வட அத்லாந்திக் ஒப்பந்த நாடுகள் என்னும் படைத் துறைக் கூட்டமைப்பில் முழுமையான உறுப்பு நாடாக இணைக்க முடியாது. பொருளாதாரப் பிரச் சனை உள்ள ஒரு நாட்டை ஐரோப்பிய ஒன்றிய த்தில் இணைக்க மாட்டார்கள். உக்ரேனைப் போர் அபாயத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் வைத்திருப்பதற்கான நகர்வுகளை 2014இல் இருந்து புட்டீன் செய்து வருகின்றார். ரசியா தலைமையிலான யூரோ-ஏசியன் பொருளாதார ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைந்த பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் உக்ரேனும் ஜோர்ஜியாவும் இணையாமல் அவை நிறைவான கூட்டமைப்புக்கள் ஆக முடியாது.
…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்