உக்ரைன் படையினருக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்குலக நாடுகள்

ஆயுதங்களை வழங்கும் மேற்குலக நாடுகள்

ஆயுதங்களை வழங்கும் மேற்குலக நாடுகள்:

உக்ரையினில் ஏற்பட்டுள்ள மோதல்களை தொடர்ந்து அந்த நாட்டு படையினரை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருகின்ன.

ரஸ்யாவின் தாக்குதலினால் அழிந்துள்ள உக்ரைன் வான்படையை கட்டியமைக்கும் முகமாக 70 தாக்குதல் விமானங்களை வழங்க இந்த நாடுகள் முற்பட்டுள்ளன.

பல்கோரியா 16 மிக்-29 ரகம் மற்றும் 14 எஸ்யூ-25 ரக தாக்குதல் விமானங்களையும், போலந்து 28 மிக் -29 விமானங்களையும், ஸ்லோவாக்கியா 12 மிக்-29 விமானங்களையும் வழங்கவுள்ளன.

இந்த விமானங்களை பெற்றுச் செல்வதற்கு உக்ரைன் விமானிகள் போலந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamil News