Home உலகச் செய்திகள் விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம்: ஆப்கான் வெளியுறவு அமைச்சர்

விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம்: ஆப்கான் வெளியுறவு அமைச்சர்

விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம்

விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம் என்று ஆப்கானில் ஆட்சி செய்யும்  தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்கு நடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை விதித்தன. இதனால் ஆப்கானிஸ்தானில் வேலையின்மை, வறுமை, பசி பட்டினி அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச அங்கீகாரத்தை விரைவில் பெற்றுவிடுவோம் என்று வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

Exit mobile version