Home உலகச் செய்திகள் இலங்கை தமிழர்களை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பமாட்டோம்-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இலங்கை தமிழர்களை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பமாட்டோம்-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

திருப்பி அனுப்பமாட்டோம்

அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பமாட்டோம் என தெரிவித்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என  தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் அலீப் மருத்துவ அறக்கட்டளையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து ஊடகவியளாலர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்,

“தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் 110 இன் விதியின் கீழ் இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்தில் 108 முகாம்களில் வசித்து வருகின்றனர். 2 முகாம்கள் காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது. மற்ற 106 முகாம்களில் 12 முகாம்களுக்கு சென்று நான் ஆய்வு செய்த போது, அந்த ஆய்வின் அறிக்கையின் படி முதல்வர் கலைஞரின் திட்டம் தொடரவேண்டும்.

317 கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கு உணவு. உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் புதிதாக வீடுகள் கட்டி தரக்கூடிய திட்டம், கல்வி திட்டம், படித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தரும் நிலையை உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வகுக்கபட்டு அவை செயல்படுத்தபட்டு தொடர்ந்து அரசின் உத்தரவுகளை நிறைவேற்றபட்டு வருகிறது.

18 அரசாணைகளை முதல்வர் போட்டுள்ளார். தற்போது கூட 3 அரசாணைகளுக்கு நான் கையொப்பமிட்டுள்ளேன்.

தொடர்ந்து, இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிலிண்டர் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. அமைச்சர் என்ற முறையில் நாங்கள் எப்போதும் இலங்கை தமிழர்களை காப்பவர்களாக இருப்போம். யாரையும் கட்டாயபடுத்தி இலங்கை அனுப்பமாட்டோம், அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம்” என்றார்.

 

Exit mobile version