இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம்-அமெரிக்கா

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கயை சந்தித்த போதே   டொனால்ட் லு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ,மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே  (Susan Walke)  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க  எதிர்பார்ப்பதாகவும் டொனால்ட் லூ தெரிவித்தார்.