Home ஆய்வுகள் எமது பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைவோம்

எமது பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைவோம்

தாயக மேம்பாடு: நேற்று – இன்று – நாளை : தாஸ்

பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தை மீளவும் அபிவிருத்தி செய்து, அதன் ஊடாக இவ்வளத்தின் உச்சப் பயன்பாட்டை நாம் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் 10 தென்னை மரங்கள், 10 வகையான பழமரக் கன்றுகள், பனை மரங்கள் நடுகை செய்யப்பட வேண்டும். இதை நாளைய சந்ததிக்காக நாம் இன்றே செய்ய வேண்டும். இன்று எமது நிலப்பரப்பில் எமது மண் இராணுவத்தால் சூறையாடப்பட்டு, பல ஏக்கர்களில் தென்னை மரங்கள் நடுகை செய்யப்பட்டு வருகின்றது. வடமராட்சி கிழக்கில் மட்டும் இராணுவத்தால் காணிகள் பறிக்கப்பட்டு 10,000ஏக்கர் தென்னை மரங்கள் நடுகை செய்யப்பட்டு வருகின்றது. எனவே நாம் எமது காணிகளில் முழுமையாகப் பெறுப்பு எடுத்து நடுகை மேற்கொண்டால் தான் எமது மண் பாதுகாக்கப்படும். எனவே பனை, தென்னை, பழமரக்கன்றுகள் நடுகை செய்வோம். பயன்படுத்துவோம் நாளை நமதே.

Capture.JPG 1 2 எமது பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைவோம்

யாழ். மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கில் 10,000 ஏக்கர் காணிகள் வரை இராணுவத்தால் பொறுப்பு எடுக்கப்பட்டு தென்னை மரங்கள் நடுகை செய்யப்பட்டு எமது மண் பறிக்கப்படுகின்றது. இது போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் தென்மராட்சிப் பகுதிகளிலும், பளைப் பகுதிகளிலும், எமது காணிகள் பறிக்கப்பட்டு தென்னை மரங்கள் நடுகை செய்யப்பட்டு வருகின்றன.

நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், கிளிநொச்சி வளாகம், மட்டக்களப்பு பல்கலைக் கழகங்களில் அனர்த்தங்களுக்கு ஏற்ப அபிவிருத்தித் திட்டங்களை இனம் காண்பதற்காக பல திட்டமிடல் ஆய்வு கட்டளைகளில் வடக்கு கிழக்கிற்கான கரையோரப் பிரதேசங்களில் இணைப்புப் பாலம் உருவாக்கத் திட்டம் இடப்பட்டது. இன்று அந்தப் பகுதிகள் யாவும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, வடக்கு கிழக்கு இணைப்பை நிரந்தரமாக துண்டிப்பதற்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நாம் எமது மண்ணை முழுமையாகப் பயன்படுத்தினால் மட்டுமே நாளை எமது மண் பாதுகாக்கப்படும்.

எமது வளங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். எல்லா வீடுகளிலும் விவசாயம், கால்நடை வளர்ப்பு மேற்கொள்ள வேண்டும். முன்னர் யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் தரம் உயர்ந்த செயற்கை முறை சினைப்படுத்தல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, பல ஆயிரம் கால் நடைகள் சினைப்படுத்தல் மூலம் தரம் உயர்த்தப்பட்டு பால் உற்பத்தியில் தன்னிறைவைக் கண்டோம். இன்று கால் நடைகளுக்கான தரம் உயர் ந்த எந்த விதமான சினைப்படுத்தல் நிலையங்களும் செயற்படவில்லை. எனவே நல்லின கால்நடைகளை தரம் உயர்த்த வேண்டும். பால், முட்டை உற்பத்தி, வீட்டுத் தோட்டம் சிறுதானிய உற்பத்தி போன்றவற்றை எல்லோரும் மேற் கொள்ள வேண்டும். இதனை மேற்கொள்ளவே தாயாக மேம்பாட்டுப் பிரிவு பரீட்சார்த்தத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இன்று வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் ஊடாகவும் இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மாடு வளர்ப்பிற்குத் தேவையான புல் வளர்ப்புத் திட்டமும் ஒவ்வொரு பயனாளிகளும் குறைந்தது ½ஏக்கர் மேற்கொள்வதற்கான திட்டமும் பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் 30 முட்டை இடும் கோழி வளர்ப்பு, பால் தரும் மாடு வளர்ப்பு, 10 வகையான பழமரக் கன்றுகள் உற்பத்தியும் வளர்ப்பும், ½ஏக்கர் சிறுதானியச் செய்கை, வீட்டுத் தோட்டம் என்பன மேற்கொள்வதன் ஊடாக தன்னிறைவான பொருளாதாரத்தை கட்டி வளர்க்க எம் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இதற்கான ஆரம்ப திட்டத்தை தாயாக மேம்பாட்டுப் பிரிவு மேற்கொள்ளும். நேற்று எமது மண்ணில் பண்ட மாற்று நடைமுறை இருந்தது. இன்று அந்த நிலைமையில்லை. நாளை அதனை உருவாக்க வேண்டும். மீன் வாங்க உழுந்து, பயறு கொடுத்து பண்டமாற்று முறை யில் தேவையைப் பூர்த்தி செய்யப் பழக வேண்டும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

தொடர்புபட்ட கட்டுரைகள்:
Exit mobile version