‘ஜெனிவா பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்க வேண்டும்’காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

நல்ல முடிவு கிடைக்க வேண்டும்

ஜெனிவா பேச்சுவார்த்தையில் எமக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்’ என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தை நம்பி உயிரோடு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கி போராடுகின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவுகளுக்காகவே உறவுகளாகிய நாங்கள் இன்று வீதியில் இறங்கி கண்ணீர் சிந்தி போராடி வருகிறோம்.

இதற்கு சர்வதேசம் நீதியை பெற்றுத் தர வேண்டும்.  ஜெனிவா 48 வது அமர்வு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் ஜெனிவாவிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு தீர்வு தேவை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பெற்றோர்கள் இன்று சுமார் 1500 நாட்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நாங்கள் வீதியில் இறங்கி எமது உறவுகளை மீட்க போராடுவது ஜெனிவாவிற்கு இல்லை உலக நாடுகளுக்கே தெரியும். நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம். நிதிக்காக போராடவில்லை” ன அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021