Tamil News
Home செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அரசாங்கம் மற்றும் சர்வதேசத்திடம் பேச வேண்டும்-காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாலர் சங்கம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அரசாங்கம் மற்றும் சர்வதேசத்திடம் பேச வேண்டும்-காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாலர் சங்கம்

25 வருடங்களாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேச வேண்டும் என கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாலர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 1997ம் ஆண்டில் அப்போது இருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆறு மாதங்களுக்குள் தீர்வை வழங்குவதாக கூறியபோதும் அது நிறைவேறவில்லை என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் பாதுகாலர் சங்கம் என்ற அமைப்பின் பிரதிநிதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த இருபது வருடங்களாக சாத்வீகமாக பல்வேறு வழிகளிலும் காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி, கல்வி, பொருளாதாரம் என பலவற்றிலும் நலிவுற்றுப்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமக்கு 20 வருடங்களுக்கு மேலாக ஏற்பட்ட ஏமாற்றம், சலிப்பு என்பனவற்றினாலேயே தற்போது எவ்வித போராட்டங்களிலும் கலந்துகொள்வதில்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாலர் சங்கத்தின் பிரதிநிதி கூறியுள்ளார்.

Exit mobile version