வாழ்விழந்து போகும் வாகனேரி;கைநழுவும் தமிழர் வாழ்நிலம்- வ.கிருஸ்ணா

மண் விடுதலைக்காகவும் இனத்தின் உரிமைக்காகவும் எழுத்த போராட்டத்தின் இருப்பை அன்று உறுதிசெய்த அதற்காக பெருவிலைகொடுத்த  கிராமங்கள்  பல  இன்று கவனிப்பாரற்று கடைநிலையில் கிடப்பது மிக கவலைக்குரிய விடயமே.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகள்,அரசஅதிகாரிகள்  ,அரசு சாரா அமைப்புகள் என எத்தரப்பிலும் கண்டுகொள்ளப்படாத பல எல்லையோர கிராமங்கள் நிர்க்கதியில் நிற்கும் நிலைமை நெஞ்சைத்  தொடுவதாக உள்ளது.

இவ்வாறான பல தமிழ்  கிராமங்கள்  மாற்று சமூகத்திடம் இன்று கையேந்திவாழும் நிலையில் இருப்பது  ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் கேள்விக்குள்ளாக்கி நிற்கும்  ஒரு விடையமாக அமைகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகனேரி கிராமம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமாகவும் உள்ளது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் கிராமங்களின் ஒரு எல்லைக் கிராமமாகவும் இது காணப்படுகின்றது. ஓட்டமாவடி உட்பட பல முஸ்லிம் பகுதிகளை அருகே கொண்டதாக அமைந்துள்ளது

வாகனேரி தனி கிராம சேவையாளர் பிரிவினைக்கொண்டதாக காணப்படுகின்ற போதிலும் இக்கிராம சேவையாளர் பிரிவில் ஐந்து கிராமங்கள் உள்ளடக்கப்படுகின்றன.IMG 4334 வாழ்விழந்து போகும் வாகனேரி;கைநழுவும் தமிழர் வாழ்நிலம்- வ.கிருஸ்ணா

குளத்துமடு,குடாமுனைக்கல்,வாகனேரி,பெட்டைக்குளம்,கூழாவர்சேனை என இந்த ஐந்து கிராமங்கள் காணப்படுகின்றன.இங்கு 535 குடும்பங்களை சேர்ந்த 1782 பேர் வசிக்கின்றனர்.இந்த கிராமத்தினைப்பொறுத்தவரையில் விவசாயம், கால் நடைவளர்ப்பு,மீன்பிடி ஆகியனவற்றினை வாழ்வாதாரமாக கொண்டுள்ளபோதிலும் இங்குள்ள பெருமளவான குடும்பங்கள் ஓட்டமாவடி,காவத்தமுனை ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களையே நம்பியிருக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இங்கு வாகனேரிக்குளம், நிலபுலங்கள் என வாழ்வாதாரத்தினை தேடக்கூடிய பல்வேறு வளங்கள் உள்ள நிலையில் இப்பகுதி மக்கள் முஸ்லிம்களிடம் கையேந்தவேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

இங்குள்ள பெருமளவான காணிகளை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர்.கடந்த காலங்களில் காணி அபகரிப்புகள் ,பல்வேறு நெருக்கடிகள் அச்சுறுத்தல்களால் தமிழர்கள்   காணிகளை விற்பது  என பல்வேறு காரணங்களினால் அதிகளவான வயல்நிலங்களை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர்.

இன்று இந்த வயல் நிலங்களின் கூலி உழைப்பாளர்களாக  தமிழர்கள் ஆகியுள்ளனர். இங்கு சுரண்டப்படும் அவர்களின் உழைப்புமூலம் முதலாளிகள் கொழுத்த இலாபத்தினை ஈட்டுகின்றனர்.

வாகனேரியை சூழவுள்ள பகுதிகள் மிகவும் வளமாக பகுதிகள்.இந்த பகுதிகளை அபரிக்கும் வகையிலான செயற்பாடுகள் நன்கு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

யுத்ததிற்கு முன்னரான காலப்பகுதியில் இப்பகுதிக்கு வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தற்போது அங்குவந்தது இது தமது பகுதியென உரிமைகோரும் நிலையேற்பட்டுள்ளதுடன் பல பகுதிகள் அடைக்கப்பட்டு வேலி போடப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது. IMG 20200710 WA0023 வாழ்விழந்து போகும் வாகனேரி;கைநழுவும் தமிழர் வாழ்நிலம்- வ.கிருஸ்ணா

குறிப்பாக வாகனேரி திடல் என்னும் பகுதியில் பழம்பெரும் ஆலயம் ஒன்று உள்ளது.அதன் அருகில் ஓரு பள்ளிவாயல் ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆலயத்தினை சூழவுள்ள பகுதிகள் அனைத்து கபளிகரம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று வாகனேரி பகுதியில் பெருமளவான மலைகள் சூழ்ந்துள்ள பகுதியாகவும் காணப்படுவதனால் இந்த மலைகள் உடைக்கப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இந்த வளத்தினையும் முஸ்லிம்களே பயன்படுத்திவருகின்றனர்.

அதுமட்டுமன்றி வாகனேரிக்கு சொந்தமான தபால் அலுவலகம் காவத்தைமுனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு வாகனேரி என்னும் பெயர்ப்பலகையுடன் இயங்கிவருகின்றது.அங்கு சென்று மாதாந்தம் உதவிப்பணம் பெறுவோர் தமது உதவிகளை பெறவேண்டிய நிலையுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து கஸ்டங்களை எதிர்கொண்டுள்ள இப்பகுதி மக்கள் சுமார் 10 கிலோமீற்றர் தூரம் பயணித்தே அந்த தபால் அலுவலகத்தில் சேவையினைப்பெறமுடியும்.காவத்தைமுனை முஸ்லிம் மக்களினை நலனைக்கொண்டு இந்த தபால் அலுலகம் அங்கு கொண்டுசெல்லப் பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.IMG 4319 வாழ்விழந்து போகும் வாகனேரி;கைநழுவும் தமிழர் வாழ்நிலம்- வ.கிருஸ்ணா

வாகனேரி பகுதி போராட்ட நாட்களில் உறுதியாக தோள்கொடுத்த பகுதி என்பதால் அதுகொடுத்த விலைகளும் அதிகமாகவே உள்ளனஇங்கு கடந்த கால யுத்ததினால் தமது கணவர் மாரை இழந்த 110 க்கும்மேற்பட்ட குடும்பத்தினை தலைமைதாங்கும் பெண்கள் உள்ளனர்.இப்பகுதியை பொறுத்தவரையில் 98 வீதமான மக்கள் மிகவும் வறிய நிலையிலேயெ உள்ளனர்.

இப்பகுதியில் ஐந்து கிராமங்களையும் இணைத்து ஒரெயொரு பாடசாலை காணப்படுகின்றது.அந்த பாடசாலையில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.இந்த மாணவர்களில் அதிகளவானோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளதன் காரணமாக பாடசாலைக்கு வரவும் குறைவான நிலையிலேயே உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த மாணவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யவே இந்த மாணவர்களின் பெற்றோர் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

குறிப்பாக வாகனேரிப்பகுதியில் வருடாந்தம் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிலகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் இந்த நிலை அதிகமாக இருந்ததாகவும் ஆனால் அது தொடர்பில் கல்வித்திணைக்களமும் பிரதேச செயலகமும் முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் ஓரளவு குறைந்துள்ளபோதிலும் அது நிறுத்தப்படவில்லையெனவும் அங்கு சேவையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.IMG 20200710 WA0025 வாழ்விழந்து போகும் வாகனேரி;கைநழுவும் தமிழர் வாழ்நிலம்- வ.கிருஸ்ணா

இந்த பாடசாலையின் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருகின்றபோதிலும் இங்கு மேலதி வகுப்புகளை நடாத்தி மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் இப்பகுதியில் எதிர்காலத்தில் சிறந்த மனித கட்டமைப்பினை உருவாக்கும் நிலையேற்படும்.

இதேபோன்று இப்பகுதியில் உள்ள வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் வகையிலான சிறிய சிறிய தொழில் நிலையங்களை அமைக்கும்போது எதிர்காலத்தில் இப்பகுதியை சேர்ந்த மக்கள் முஸ்லிம்களிடம் கையேந்தவேண்டிய நிலையேற்படாது.

குறிப்பாக இப்பகுதியில் கல்வாடி அமைத்து கல்வெட்டுவதற்கான சாத்தியப்படக்கூடிய வளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.அதற்கான முதலீடுகளை மேற்கொண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும்போது அதிகளவானோர்   வேறு  பிரதேசங்களுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுச்செல்லவேண்டிய நிலையிருக்காது.

இதேபோன்று கால்நடை வளர்ப்பு உட்பட இப்பிரதேசங்களின் வளங்களை ஆய்வுக்குட்படுத்தி அதன் மூலம் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதன் ஊடாக இப்பகுதியை முழுமையாக தமிழ் பகுதியாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும்.IMG 4341 வாழ்விழந்து போகும் வாகனேரி;கைநழுவும் தமிழர் வாழ்நிலம்- வ.கிருஸ்ணா

கிழக்கில் இன்று எத்தனையோ கிராமங்கள் மாற்றினத்தவர்களின் ஆக்கிரமிப்புள்ளாகி அங்கு  தமிழரின் இருப்பு அறவே இல்லாதொழிக்கப் பட்டுவிட்டது.பல கிராமங்கள் இநிலபுலன்கள் அபகரிப்புக்குள்ளாகி நிற்கின்றன.

இன்னும் தமிழ் உணர்வுகுன்றாமல் தமது பகுதியை பாதுகாப்பதற்காக அங்குள்ள இளைஞர்கள் போராடிவருவது அவர்களுடன் உரையாடும்போது தெரிகின்றது.நாங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தாலும் வாழ்வாதாரத்திற்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்லும் நிலையுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்றைய நிலைமை மிகவும் ஆபத்தானது.எனவே இருக்கின்ற தமிழர்களின் வாழ்விடங்கள் இனியாவது பறிக்கப்படாதவாறு,கைநழுவிப் போகாதவாறு கவனமெடுத்துச் செயற்படவேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் ஒன்றுபட்ட கடமையென கொள்வோம்.