Tamil News
Home செய்திகள் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்-அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்-அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

இலங்கையின்  புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

அத்துடன்  இலங்கையின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக் கூடிய புதிய அரசாங்கம்  வழிவகுக்கும் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு  தனது ட்விட்டர் செய்தியில்,ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுடன் கூடிய அனைவரும் அடங்கிய அரசாங்கத்தை அமைக்க இது வழிவகுக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்துள்ளது.

இலங்கைக்கு வேகமான பொருளாதார மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. அத்துடன் தனிநபர் சுதந்திரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பாதுகாத்தலும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version