Tamil News
Home செய்திகள் பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம் – அமெரிக்கத் தூதுவர்

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம் – அமெரிக்கத் தூதுவர்

“தரையிலும் கடலிலும் இலங்கை – அமெரிக்க  பாதுகாப்பு கூட்டாண்மையில் இரு நாட்டு படைகளுக்கு இடையில்  இடம்பெற்ற பயிற்சியின் வெற்றியானது, 75 ஆண்டுகளாக வலுவான அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவின் ஆழத்திற்கு ஒரு சான்றாகும்” என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

அத்துடன் “இப்பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்றுவதற்காக இப்பங்காண்மையினை மேலும் அதிகரிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எட்டு நாட்களாக நேரடியாகவும் மற்றும் கடலிலும் நடைபெற்ற, இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவத்தினரிடையே ஒத்துழைபை மேம்படுத்திய Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 பயிற்சியானது ஜனவரி 26ஆம் திகதி கொழும்பில் நிறைவடைந்தது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

Exit mobile version