3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கினோம்-ஐ.நாவில் இந்தியா

“எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வர்த்தக தீர்வுக்காக நாங்கள் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கினோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஐ.நாவில் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கவனம் உக்ரைனில் இருக்கும் அதேவேளையில், இந்தியா ஏனைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, குறிப்பாக அதன் சொந்த அண்டை நாடுகளில் என அவர் தெரிவித்தார்.

அதாவது எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வர்த்தக தீர்வுக்காக இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்களை இந்தியா  வழங்கும்போது, மியான்மருக்கு 10,000 மெட்ரிக் தொன் உணவு உதவி மற்றும் தடுப்பூசிகளை வழங்கியபோது. அரசியல் சிக்கலால் கவனிக்கப்படாத மனிதாபிமான தேவைகளின் இடைவெளியை நிரப்பும்போதும் இந்தியா சவார்களை சந்தித்தது.

மேலும் பேரழிவு, பதில் அல்லது மனிதாபிமான உதவி எதுவாக இருந்தாலும், இந்தியா வலுவாக இருந்து வருகிறது, குறிப்பாக நமக்கு அருகில் உள்ளவர்களுக்கு பங்களிக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.