Home செய்திகள் நாளைய கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கோரினோம்; மாவை சேனாதிராஜா

நாளைய கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கோரினோம்; மாவை சேனாதிராஜா

கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கோரினோம்
13 தொடர்பில் யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் கூடி ஆராயவுள்ள கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கோரினோம். அது சாத்தியப்படவில்லை. இதனாலேயே அந்தக் கூட்டத்தில் நாம் பங்கேற்கவில்லை என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராசா கூறியுள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவை கோருவது தொடர்பிலான ஆராயும் கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி பங்கேற்காதது தொடர்பில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது என்று அரசியல் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. இந்த நிலையில், கடந்த 29 ஆம் திகதி தலைவர் சம்பந்தனை உயர்ஸ்தானிகர் கோபால்பாக்லே சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டன. இதைத் தொடர்ந்து அன்றைய நாளிலேயே நடக்கவுள்ள கூட்டத்தை பிற்போடுமாறு நானும் தலைவர் சம்பந்தனும் கேட்டோம்.

“இந்த விடயம் இந்திய உயர்ஸ்தானிகரிடமும் தெரிவிக்கப்பட்டது. அவருடன் பேசப்பட்ட இந்த விடயங்களை நாம் இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. இந்த விடயத்தை நாம் மிகக் கவனமாகக் கையாள வேண்டும். அடுத்த முறை பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது நாம் அனைவரும் கூடிப் பேசிய பின்னர் இதுபற்றி முடிவு எடுப்போம். இந்த விடயங்கள் தொடர்பில் தலைவர் சம்பந்தன் அறிவிப்பார்” என்றார்.

Exit mobile version