திருப்புமுனை அரசியலைத்தான் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம் – ராமு மணிவண்ணன்

திருப்புமுனை அரசியலைத்தான் நாம்

ராமு மணிவண்ணன்

திருப்புமுனை அரசியலைத்தான் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம்: ஓய்வு பெற்ற சென்னை பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியரும் தொடர்ந்து தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு தளங்களில் குரல் கொடுத்து வருபவருமான திரு ராமு மணிவண்ணன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி

கேள்வி:
ஈழத்தமிழர் இந்திய மேலாண்மையை உருவாக்குவார்கள் என்பது சிங்கள பெளத்த பேரினவாதிகளின் ஈழத்தமிழின அழிப்புக்கு கடந்த 75 ஆண்டுகால நியாயப்படுத்தல். இதனால் இந்தியாவால் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாக உள்ளவர்கள் ஈழத்தமிழர்கள். இருந்தபோதிலும் ஈழத்தமிழரின் தாயக தேசிய தன்னாட்சியை இன்றுவரை அங்கீகரிக்க மறுப்பதேன்?

பதில்:
முதல் காரணமாக இந்தியாவிற்கு ஈழத்தமிழர்கள் அரசியல் மற்றும் பன்னாட்டு விடயங்களில் முக்கிய பங்கு வகிக்கிற  போதிலும், அதையும் தாண்டி இலங்கையினுடைய அரச நிர்வாகத்தின் ஊடாகத்தான்  வெளியுறவுக் கொள்கைகள் இந்தியாவிற்குத் தீர்மானிக்கப்படுகின்றன.

அதன் அடிப்படையில் பார்க்கும் போதுதான் இந்தியாவிற்கு தமிழர்களுடைய நிலைப்பாடு, அவர்களின் பிரச்சினைகள் அதோடு மட்டுமல்லாமல்  தமிழர்களை எவ்வாறு இலங்கை அரசாங்கம் பார்த்தாலும் இந்திய மேலாண்மையை நேசித்தாலும் கூட அதை ஒரு அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இருந்து தான் இந்தியாவையும் தமிழர்களையும்  ஏற்க வேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்தின் திட்டவட்டமான ஒரு  செயற்பாடாகத்தான் முதலாவதாக பார்க்க முடியும்.

இரண்டாவதாக பார்க்கும் போது அதே நிலையில் இருந்து இந்தியாவிற்கு இத்தைகைய நிலைப்பாடுடைய ஓர் இலங்கை அரசாங்கத்திடம் தமிழர்களுடைய உரிமைகளையும் அவர்களுடைய நிலைப்பாடுகளையும் நிலைநாட்டுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு என்று ஓர் தேசிய நலன்களிலும் தேசிய கருத்துக்களிலும் கையாளும் போது, இலங்கை அதை முரண்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது.

பல ஆண்டுகளாக இத்தைய ஓர் சிக்கலுக்குள் இருந்துதான் இந்தியா தன்னுடைய தேசிய நலன்களையும், தமிழர்களுடைய உரிமை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளையும் எடுத்துரைக்க வேண்டிய ஓர் கட்டாயத்தில் இருக்கின்றது.

ஆனால் நமக்கு இதில் புரிந்து கொள்ள முடியாத ஓர் சவாலான விடயம் என்ன வென்றால், இந்தியாவிற்கு கூட தமிழர்களுடைய உரிமைகளையும், தமிழர்களுடைய நலன் மற்றும் அவர்களுடைய நிலைப்பாடுகளை இந்தியா ஒரு மேலாண்மை பார்வையோடு எடுத்துரைக்கும் பட்சத்தில், இந்தியாவுக்கு கூட தன்னுடைய தேசிய நலன், வெளியுறவுத்துறை கொள்கையிலும் ஒரு உறுதியானப் பிடிப்பு இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புக்களை கடந்த காலங்களில் இந்தியா முப்பது ஆண்டுகளுக்கு மேலாக துாக்கி வீசிவிட்டது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இது ஒரு முப்பது ஆண்டுகால வரலாற்றின் பின்னணியில் இருந்து பார்க்கின்றோம். அதே நேரம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக என்று பார்த்தால் இந்தியா ஒரு முழுமையான புரிதலோடு ஒரு நிலைபாட்டினை இந்தியா எடுக்க சரித்திர ரீதியாகத் தவறியுள்ளது.

அது ஈழத் தமிழர் பிரச்சினையாகட்டும் மலையகத் தமிழர் பிரச்சினையாகட்டும் அவர்களுடைய குடியுரிமை பிரச்சினையாகட்டும் இந்தியா, இலங்கை அரசாங்கத்தினுடைய வெளிவிவகாரக் கொள்கையுடன் அரசாங்கத்தின் நலனாகத் தான் பார்க்கின்றது. அந்த மக்களுடைய நலன் சார்ந்த விடையங்களை முன்வைப்பதற்கும் அதற்காக தன்னுடைய ஓர் அதிகாரத்தைப் பயன்படுத்த இந்தியா தவறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

அதலால் இதில் வந்து ஒரு சரித்திர தவறு என்பதைவிட சரித்திர ரீதியாக தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இருக்கின்றது. அதாவது இந்தியாவின் மேலாண்மையை மட்டும் நம்பித்தான் தமிழர்களுடைய அரசியல் நிலைப்பாடுகளை எடுத்துரைக்க வேண்டிய ஓர் சூழல்.

அதோடு இந்தியா ராஜ்சிய ரீதியிலான பிரதான அரசாக இருக்கும்  பட்சத்தில் இருக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு தமிழர்களுடைய உரிமைகளையும் தமிழர்களுடைய நிலைப்பாடுகளையும் ஓர் புவிசார் அரசியல் ரீதியாக எடுத்துரைக்க தமிழ் சமூகம் தவறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

கேள்வி:
மலையகத் தமிழருக்கு நடைமுறை அரசுத்தகுதி உண்டு என்ற நேருவின் உறுதியான அரசியல் தத்துவத்தை கடந்த 75 ஆண்டுகளில் எந்த அளவுக்கு இந்தியா நடைமுறைப்படுத்தி உள்ளது?

பதில்:
நடைமுறை தகுதி என்று கூறுவது குடியுரிமைத் தகுதியா, அல்லது   அவர்கள் இயல்பாக வசித்தல்  போன்ற நடைமுறைகளா  என்று நாம் பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் இயல்பாக வாழலாம் என்று கூறும் போது, அவர்களுக்கான ஓர் அனுமதி அதோடு அகதிகள் முகாம்களில்   வைக்கப்பட்டிருக்கின்ற  நிலைப்பாடுகள், அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படாத நிலை. இது ஒரு இரட்டை நாட்டு தன்மைதான். ஒரு பக்கம் அவர்களுடைய உரிமைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறும்போது, அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டும்.

திருப்புமுனை அரசியலைத்தான் நாம்ஈழத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் கூட  அனைவருமே அகதிகள் முகாமில் தான் இலங்கை தமிழர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

அங்கு வாழ்கின்றவர்களுக்கு அடிபடை உரிமைகள் இருக்கின்றது. அங்கீகாரங்கள் இருக்கின்றன. அத்தோடு அவர்களை முகாமிலேயே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் மனித உரிமை சட்டத்தில் கிடையவே கிடையாது.

ஆதலால் அடிப்படை மனித உரிமைகளை இலங்கையில் மட்டுமல்லாது உலகில் எந்த நாட்டிலும் மதிக்கத்தக்க மனித உரிமைகளை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். அங்கீரத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

அதோடு மலையத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும். அல்லது ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படக் கூடாது என்பதில்லை. மலையத்தமிழர்கள் குடியுரிமை பறிக்கப்பட்ட ஓர் சமூகமாக அதற்கு இந்தியாவும் உடந்தையாக இருக்கும் ஓர் காரணத்தினால்  அவர்களுக்கு குடியுரிமை மற்றும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவிற்கு கடைமை இருக்கின்றது.

திருப்புமுனை அரசியலைத்தான் நாம் மேலும் ஈழத்தமிழர்கள் 1970களின் இறுதியில் இருந்து 80,90களில் தொடர்ந்து இந்தியாவிற்கு அகதிகளாக வருந்து அவர்களும் முகாம்களில்தான் வாழ்ந்து கொண்டிருக் கின்றார்கள். எனவே அவர்கள் பன்னாட்டு மனித உரிமை சட்டத்தின் படியும், பன்னாட்டு அகதிகளுக்கான அடிப்படை உரிமைகளும்   அவர்களுக்கும்  வழங்கப்படாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இரண்டிலுமே இந்தியா, இரண்டுவிதமான நிலைப்பாட்டில் உள்ளது. அதாவது பன்னாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை என்பதற்காக அவர்களின் நடைமுறை உரிமைகளிலும் அவர்களின் அன்றாட வாழ்கையிலும் ஒரு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அதுவும் 30 ஆண்டுகளாக அவர்கள் இவ்வாறு தான் இருக்கின்றார்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே மலையகத் தமிழர்கள் ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் பொதுவாக இலங்கை தமிழர்களின் இந்தியாவின் அகதிகள் சார்ந்த ஒரு பார்வை அதோடு அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் அங்கு இருக்கின்ற  அடிப்படையான மனித உரிமைகள் கூட நாம் இதில் வந்து பார்க்கத் தவறிவிட்டது என்றுதான் நான் நினைக்கின்றேன்.

கேள்வி:
75 ஆண்டு கால உலகின் மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியா 75 ஆண்டுகாலமாகச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் சனநாயகப்பங்களிப்பு மறுக்கப்பட்டு வரும் ஈழத்தமிழர்களுக்கு அனைத்துலக நாடுகளின் அமைப்பு நீதி வழங்க வேண்டுமென இந்திராகாந்தி அம்மையார் ஆர்ஜென்டினா மூலம் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்ற பிரச்சினையை அவரின் பின்னர் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது?

பதில்:
இலங்கை தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என்று பார்த்தார். கூட அவர்களுக்கு இலங்கையிலேயே மிகப் பெரிய உள்நாட்டிலேயே அவர்களுக்கு எதிரான அரசியல், அரசு சார்ந்த வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. அத்தோடு மக்களுக்கு எதிரான துாண்டுதல்கள், பொருளாதாரம் கல்வி, குடியுரிமை   ரீதியான முடக்கங்கள் என பல வழிகளில் நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் திணித்ததோடு மட்டுமன்றி அவர்களை வெளியேற வேண்டிய ஒரு கட்டாயமான  ஒரு சூழலை உருவாக்கி பொறுப்பு இலங்கை அரசாங்கத்தை சாரும்.

வாழ்வு, சாவு எதைப் பற்றியும் கவலையில்லை'- 'இரும்பு பெண்மணி' இந்திரா காந்தியின் வீர வரலாறு | indira gandhi death anniversary and history of indira gandhi | Puthiyathalaimurai ...
இந்திரா காந்தி

இந்த சூழலில் இந்தியாவின் தலைமையில் இருந்த இந்திரா காந்தி அம்மையார், இது பன்னாட்டுத் தலையீடு,  மனித உரிமை மீறல்கள் என்பதோடு மட்டுமல்லாமல் குறிப்பாக 1983ம் ஆண்டுக்குப் பின்  அரசே ஏற்று நடத்திய ஓர்  இனப்படுகொலை என்பதால் பன்னாட்டு தலையீடு இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளாக பாதுகாப்பு குடும்பத்தில் அல்ஜன்டீனாவின் துாண்டுதலில் ஒரு பிரகடனத்தை எடுத்து செல்ல வேண்டும் என இந்தியா முயற்சித்தது என்பது உண்மை.

ஆனால் அடுத்த நான்கு அண்டுகளில்   அரசியல், அரசு அதிகாரங்களில் நடந்த ஓர் மாற்றம், அத்தோடு வெளியுறவுத் துறைகளில் இருந்த அதிகாரிகளின் போக்குகள். பின் அவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இருந்த பிணைப்பு பின் அவற்றைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் எவ்வாறு இந்திய அரசாங்கத்திலேயே ராஜதந்திரத்தின் ஊடாக ஓர் பிளவினை ஏற்படுத்தியது   இவையெல்லாம் சரித்திரம்.

ராஜீவ் படுகொலை: 'உங்களையும் கொன்றுவிடுவார்கள் - சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் - ராஜீவ்' - BBC News தமிழ்
ராஜீவ் காந்தி

ஆகவே இந்த நேரத்தில் நான் நினைவு கூருவது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் இந்திய வெளிவுறவுத்துறை அதிகாரி ஜெ.பி. வெங்கடேசன் அவர்களுக்கும் இருந்த ஒரு முரண்பாடு என்பதைக் கூட அதே முரண்பாட்டின்  வெளியில்  இருந்து பிரதமரோ அல்லது வேறு ஒரு அதிகாரிகளோ அந்த நேரத்தில், வெளியுறவுச் செயலர் அந்த பதவியை விட்டு விலக வேண்டிய நிலை சூழலும் இவை அனைத்துமே இலங்கை அரசின் பின்னணியில் நடைபெற்றது.

அதன் பின் மணிவிஸ்யர் என்பவர் பதவிக்கு வருவதும் இவை எல்லாமே, ஒரு அரசு வெியுறவுத் துறையின் உள் உள்னோக்கில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது அதற்கு பின் நடந்த 20 அண்டு கால அரசியலில், 1978ம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கைக்குச் சென்றது. பின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம், அதோடு இலங்கை தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலை இவை அனைத்தையும் நீங்கள் வரிசைப்படுத்தி பார்த்தீர்கள் என்றால் இந்தியாவின் நிலைப்பாட்டில் நடந்த மாற்றத்தை அறிய முடியும்.  அந்த ஒரு மாற்றத்தின் உச்சத்தில்தான் 2009ம் ஆண்டு இனப்படுகொலை நடந்தேறியது. இவை அனைத்தையும் கடந்து அடுத்து பத்தாண்டுகளில் நாம் என்ன பார்க்கின்றொம் என்றால், அந்த உச்சத்தில் இருந்து மற்ற ஒரு உச்ச நிலைக்கு போகவே முடியாத ஒரு சூழலை நாம் சந்தித்து விட்டு, இப்பொழுது ஒரு திருப்பு முனை அரசியலைத்தான் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம்.

Tamil News