ஆழமான கடன்பொறி பற்றி அச்சத்தை வெளிப்படுத்தும் வாங் யின் விஜயம்

ஆழமான கடன்பொறி

சீன வெளிவிவகார அமைச்சரின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயங்கள் ஆழமான கடன்பொறி பற்றிய அச்சத்தை உருவாக்குகின்றது என தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய சிந்தனைக்குழு தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு மத்தியில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

ஆனால் தேசியவாத இலங்கையர்களும் மாலைத்தீவர்களும் தங்கள் இறையாண்மையின் மீது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கடன்பொறி இராஜதந்திரத்தினுள் சிக்கியிருப்பதையும் உணர்ந்துள்ளது என தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய சிந்தனைக்குழு கூறியுள்ளது.

நாட்டின் மோசமான பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்துடன் ஒப்பந்த்தினைப் போன்று  சீனா மேலும் முக்கிய பகுதிகளை, வளங்களை சுரண்டுவதற்கான கோரிக்கைகளை  முன்வைக்கலாம் என இலங்கையர்கள் அச்சமடைந்துள்ளதாக தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய சிந்தனைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் “இருப்பினும், சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது சிறப்புரிமை பெற்ற பரிவாரங்கள் தங்களின் விஜயத்தின்போது இலங்கை மற்றும் மாலைதீவில் காணப்பட்ட பல்வேறு தொற்றுநோய் விதிமுறைகளை கண்டு மட்டும் புருவங்களை உயர்த்தவில்லை.

தேசியவாத இலங்கையர்களும் மாலத்தீவர்களும் தங்கள் இறையாண்மையின் மீது கொண்டிருந்த ஆழமான வேரூன்றிய அக்கறையை கண்டும் அவர்கள் புருவங்களை உயர்த்தினர். அதுமட்மன்றி சீனாவின் கடன்-பொறி இராஜதந்திரத்தின் வலுக்கட்டாய பயன்பாட்டின் மூலம் பெருகிவரும் ஆபத்து நிலைமைகளையும் அவர்கள் அறிந்துள்ளனர்” என்றும் சிந்தனைக் குழு குறிப்பிட்டுள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, இந்தியா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புகொள்வதன் மூலம் சீன செல்வாக்கு மற்றும் கடன் சிக்கலை கட்டுப்படுத்த முயன்றார். மாலைத்தீவில் வாங் யீக்கு ஆதரவான மற்றும் அன்பான வரவேற்பு இருந்த போதும் அங்கு அவர் பல வெற்றிகளைப் பெற்றதாகத் தெரியவில்லை.

மாலைத்தீவில் 2018இல் சீனா சார்பு தலைவர் அப்துல்லா யாமீன் மாற்றியமைக்கப்பட்டதன் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ், இந்தியாவுடனான கூட்டுவாழ்வு உறவுகளுக்கு துல்லியமாகத் திரும்பினார்.

இந்தியா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புகொள்வதன் மூலம் சீன செல்வாக்கு மற்றும் கடன் சிக்கலைக் கட்டுப்படுத்த சோலி முயற்சித்தார் என்றும் சிந்தனைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையைப் போலவே மாலத்தீவுகளும் சீனாவின் ஒரே மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சியின் ஒரு பகுதியாகும், இதை அமெரிக்காவானது சிறிய நாடுகளை சிக்க வைப்பதற்காக சீனாவின் ‘கடன் பொறி’ இராஜதந்திரத் திட்டம் என்று முத்திரை குத்தியுள்ளது. எனவே, சோலிஹ் தலைமையிலான ஆட்சி, இந்த ஆண்டு பரந்த இந்தோ-பசிபிக் முன்னேற்றங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டுவதன் மூலம் சீனாவுடனான உறவுகளை சமநிலைப்படுத்த முயன்றது.

மேலும் இதன் ஒரு அங்கமாக அமெரிக்காவுடன் மாலைதீவு முதல் வருடாந்திர பாதுகாப்பு உரையாடலில் ஈடுபட்டுள்ளது, அத்துடன் அமெரிக்காவின் இராஜதந்திர பணியை தனது நாட்டுக்கென நடத்துவதற்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறிருக்க,  மாலைதீவிலிருந்து வாங் யி இலங்கைக்குச் சென்றார். இலங்கை ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நாட்டில் 2021 நவம்பரில் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்ததுள்ளது.

இதனால் இலங்கையால் ஆகக்கூடியது ஒரு மாதத்திற்கான இறக்குமதியை மட்டுமே தக்கவைக்க இயலுமாக உள்ளது. அதுமட்டுமன்றி இலங்கையில் பெருகிவரும் கடன்தொகையானது, நாணய நெருக்கடி மற்றும் உயர் பணவீக்கம் ஆகியவை காரணமாக இறையாண்மை தொடர்பான கரிசனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

எனவே, சுற்றுலாவை ஊக்குவித்தல், முதலீடுகள் மற்றும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஆராயப்பட்டுள்ளன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸுடன் வாங் யீ நடத்திய பேச்சுவார்த்தையின் போது, பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய பிரேரணையொன்று முன்வைக்கப் பட்டுள்ளதாக அந்தச் சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. வாங் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளின் வளர்ச்சிக்காக புதிதாக மன்றமொன்றை நிறுவுவதற்கு முன்மொழிந்தார்.

உலக அபிவிருத்திக்கான மையத்தின் கூற்றுப்படி, சீனாவின் ஒரே மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சியின் கீழ் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரண்டும் கடன் தொல்லைக்கு ஆளாகின்றன.

மாலைதீவுகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்று கருதப்படுகிறது, அதேநேரத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படக்கூடியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது,

மேலும் சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, சீன உயரதிகாரியும் அவரது தூதுக்குழுவும், இலங்கைக்கான விஜயத்தின் பின்னணி, சீனாவில் ஆபிரிக்கக் காலடியில் முழுமையாக தங்கியிருக்காது தெற்காசியாவுக்கும் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தி நகர்த்துவதாகும்.

ஏனென்றால், ஆபிரிக்காவில் ஆயிரக்கணக்கான நகரங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு அவர்களின் இலக்கு தோல்வி கண்டுவிடும் என்ற அச்சம் சீனாவுக்கு உள்ளது. ஆகவே தான் தற்போது தெற்காசியா நோக்கி நகர்ந்திருக்கின்றது.

நன்றி- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் Tamil News