இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம்

இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம் என அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

முஸ்லீம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சி போன்ற அமைப்புக்கள் இதற்கு ஆதரவாக இருக்கின்றன. தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பின்னர் ஆப்கானுக்கு செல்லுங்கள் என்ற வாசகங்கள் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்ற வாசகங்கள் பதிவிடப்பட்டன.

தலிபான்களின் சமூகவலைத்தளங்களை ஆதரித்ததற்காக அசாம் மாநிலத்தில் முஸ்லீம் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.