Home செய்திகள் விமலின் அமைச்சு பிடுங்கப்படும்? ஆளும் கூட்டணிக்குள் குழப்பம்!

விமலின் அமைச்சு பிடுங்கப்படும்? ஆளும் கூட்டணிக்குள் குழப்பம்!

சர்ச்சைக்குரிய கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு விமல் வீரவன்ச கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அதனை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார் – விமல் வீரவன்சவின் எதிர்ப்புக் காரணமாக இந்தச் சட்ட மூலத்தை ஆகஸ்ட் மாதம் வரை பிற்போட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனியார் பல்கலைக் கழகங்களை அமைப்பதை தங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளாது. குறிப்பிட்ட ஏற்பாடுகளை அகற்றாமல் சட்ட மூலத்தை மீண்டும் கொண்டு வந்தால் அதனை எதிர்ப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் வசமிருக்கும் அமைச்சுகளில் சிலவற்றை அவ்விருவரி டமிருந்தும் அபகரிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகின்றது.

அவ்விருவரி டமிருந்தும் மாற்றப்படும் அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் 3 அமைச்சுகளை வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாகவும் அறிய முடிகின்றது.

நிதியமைச்சராக பஸில் ராஜபக்ஷ நியமிக்கப் பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை விரைவு படுத்தி, இலக்கை எட்டிக் கொள்வதற்கு, புதிய அமைச்சரவை மாற்ற மொன்றை மேற் கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

அதன் அடிப்படையில், சிறீலங்கா சுதந்திர பொதுஜனக் கூட்டணியின் கீழான ஒப்பந்தங்களின் அடிப்படையில், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சுப் பதவிகளை, அக்கட்சிக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதன் நிமிர்த்தமே அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரிடமிருக்கும் அமைச்சுகளின் விடயதானங்களை பகிர்வதற்கு அரசாங்கம் கலந்தாலோசிப்பதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்தால் வழங்குவதற்கு தீர்மானிக்கப் பட்டிருக்கும் அமைச்சுகளை பொறுப் பேற்றுக் கொள்வதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்து ள்ளதாக அறிய முடிகின்றது.

இதே வேளை புதிய அமைச்சரவை மாற்றத்தில், சுகாதாரம், பொலிஸ், தொழில் மற்றும் கல்வி ஆகிய அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப் படுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version