Home செய்திகள் சத்தமில்லாமல் பறிபோகும் முல்லைத்தீவு கிராமங்கள்- ரவிகரன்

சத்தமில்லாமல் பறிபோகும் முல்லைத்தீவு கிராமங்கள்- ரவிகரன்

337284022 1247874299500511 3067099202367874058 n 1 சத்தமில்லாமல் பறிபோகும் முல்லைத்தீவு கிராமங்கள்- ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் பலவற்றில் சத்தமில்லாமல் திட்டமிட்ட சிங்கள – பௌத்த மயமாக்கல் இரகசியமாக மெற்கொள்ளப்படுகின்றது.

இந்தப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் இது தொடா்பான விபரங்களை உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார். அதிலிருந்து முக்கியமான பகுதிகளை இலக்கின் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்கள் சிலவற்றில் சத்தமில்லாமல் பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றை நீங்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளீர்கள். உண் மையில் அங்கு என்ன நடைபெறுகின்றது? உங்க ளுடைய அவதானிப்பு என்ன?

கடந்த 18 ஆம் திகதி (18-03-2023) மக்கள் இது தொடா்பாக எனக்கு அறியத்தந்திருந்தாா்கள். கற்கள் போடப்பட்டு நில அளவைக்கான முயற்சி ஒன்று நடைபெறுவதாக அவா்கள் தெரிவித்தாா்கள். கடந்த வருடமும் இவ்வாறான ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அது தவறான செயற்பாடு எனக்கூறி, அவ்வாறு போடப்பட்டிருந்த கற்களை நாங்கள் அகற்றினோம். அப்போது அவா்கள் இவ்வாறான நடவடிக்கைகள் எதனையாவது முன்னெடுப்பதாக இருந்தால், முல்லைத்தீவு அரசாங்க அதிபா் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலா், மற்றும் கமக்கார அமைப்புக்கள் ஆகியோருடைய ஒத்துழைப்புடன்தான் அவற்றை முன்னெடுப்போம் என உறுதியளித்திருந்தாா்கள். ஆனால், அதற்கு முரணாக கடந்த 18 ஆம் திகதி மாலை மீண்டும் கற்களைப் போடுகின்றாா்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்து. 20 ஆம் திகதி அந்தப் பகுதிக்கு நாங்கள் சென்றோம். மழையால் அந்தப்பகுதிக்குச் செல்ல முடியவில்லை.

கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி போன்ற ஆறு கிராம சேவகா் பிரிவுகளிலும் வயற்காணிகள், நீா்ப்பாசனக் காணிகள், மானாவரிக் காணிகள் பரந்துகிடக்கின்றன. இந்தக் காணிகளில் எம்மவா்கள் இப் போது விவசாயம் செய்கின்றாா்கள். இந்தப் பகுதி களில்தான் இப்போது எல்லைக் கற்களைப் போட்டு அவற்றை அபகரிக்கும் வகையில் செயற் பட்டுவருகின்றாா்கள். 20 ஆம் திகதி நாம் நேரில் சென்ற போது இவற்றை எம்மால் பாா்க்க முடிந்தது.

இந்தப்பகுதிக்கு நாம், விவசாயிகள் சிலரையும் அழைத்துக்கொண்டு மோட்டாா் சைக்கிளில்தான் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில்  சென்றிருந்தோம். இங்கு சென்ற போது நாம் பாா்த்தது எமக்கு ஆச்சரியமாக இருந்தது. கல்துாண் என்ற இடத்தில் கூட தமது ஆதிக்கத்தை வரிவாக்கும் வகையில் அவா்கள் கற்களைப் போட்டுள்ளாா்கள். கல்துாணுக்கு அப்பால் இருக்கின்ற முககியமான இடம் மணல்கேணி.

இந்தப்பகுதியில் எங்களுடைய நீா்ப்பாசனக் காணிகள் எனச் சொல்லக்கூடிய காணிகளைத் தவிா்த்து எமக்கு பிரயோசனமான எம்மவா்களிடம் அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளாகவே இருக்கின்றன. இதில் பெரும்பாலான காணிக ளில் எமது மக்கள் இப்போதும் விவசாயம் செய்துவருகின்றாா்கள்.ஆனால், இதில் சில காணிகளைத் தமது காணிகள் எனக்கூறி வனஇலாகா துறையினா் எல்லைக் கற்களைப் போடுவதும், வன ஜீவராசிகள் திணைக்களம் தமது காணிகள் என அறிவிப்பதும், தொல்லியல் திணைக்களம் தமது பகுதி என அறிவிப்பதும் தொடா்கின்றது. இதனால், எம்மவா்கள் இந்தக் காணிகளுக்குள் சென்று மது பணியைத் தொடரமுடியாத நிலை ஏற்படுகின்றது.

இதனைவிட, ஆவயன்குளம், முந்திரி கைக்குளம், மறிச்சுக்கட்டி குளம் போன்ற குளங்களுடன் இணைந்த வயற்காணிகளை ஏற்கனவே அபகரித்துவிட்டாா்கள். அந்த வயற் காணிகளையும், நீா்ப்பாசன் குளங்களையும் அபகரித்துவிட்டு அவற்றை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கின்றாா்கள்.  எமது மக்கள் இடம் பெயா்ந்த பின்னா் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது,  அந்தக் காணிகள் அனைத்தும் சிங்கள மக்களுடைய கைகளுக்குத்தான் சென்றது. இப்படியாக எமது காணிகளை எடுக் கும் போது, அந்தப் பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையுடன், தாங்கள் வாழ்வாதாரத் துக்கு வழியின்றி இருப்பதாகவும், பிள்ளை களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாதி ருப்பதாகவும் அவா்கள் தமது குமுறலை வெளிப் படுத்தினாா்கள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்குத் தெரியாமல் வெலியோயாவில் இருக்கும் நில அளவைத் திணைக்களத்தினா் கொழும்பிலுள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக இங்கு வருவாா்கள், வந்து எல்லைக் கற்களை போடுவாா்கள் என்றால், முல்லைத்தீவு மாவட்ட செயலகமோ அல்லது கரைத்துறைப்பற்று பிரதேச செயலகமோ இங்கு எதற்காக செயற்பட வேண்டும்? மக்களுடைய பிரச்சினைகளைப் பாா்க்க வேண்டியவா்களை  அணுகாமல் கொழும்பிலி ருந்து வந்து இப்படியான வேலைகளை கொழும் பின் அறிவுறத்தலுக்கு அமைவாக அவா் கள் செய்வாா்கள் என்றால், எங்களுடைய மக்கள் எங்கே செல்வாா்கள்? இந்தப் பகுதிகளில் பௌத்த மயமாக்கலும் முன்னெடுக்கப்படுகின்றதா? அவற்றையும் உங்களால் அவதானிக்க முடிந்ததா?

கல்துாண் என்ற இடத்திலிருந்து பாா்க்கும் போது அந்தப் பக்கத்தில் பௌத்த திணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது. அங்கு பெரிதாக மூன்று விகாரைகளை அமைக்கவிருப்பதாகவும் அறிய முடிகின்றது. அங்கு இப்போதும் ஆதிவைரவா் கோவில் ஒன்றுள்ளது. இந்தப் பகுதியில் இப் போது சிங்கள – பௌத்த மயமாக்கல் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனைவிட மணல் கேணி என்ற இடத்தில் சிவபெருமானின் சிலையை உடைத்துப்போட்டுள்ளாா்கள்.

அதனால் நாம் கேட்பது எமது மக்களின் காணிகளை எம்மவா்களிடமே விட்டுவிடுங்கள். அவா்களிடம் போ்மிட் உள்ளது. உறுதி இருக் கின்றது. ஆனால், இவை அனைத்தையும் மீறி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, அவா் தன்னுடைய கையொப்பத்துடன், காணி உறுதி ஏற்கனவே இருந்தவா்களுக்கு மீண்டும் காணி உறுதி வழங்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடு உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இடம்பெற்றிருக்காது.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” என மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது முன்னெடுத்த திட்டத்தின்போது, ஆலயன்குளம் என்ற பகுதியில் எமது மக்களின் விவசாயம் செய்துவந்த 360 ஏக்கா் நிலத்தைப் பறித்து, 900 ஏக்கராக விஸ்தரித்து சிங்களவா்களின் கைகளில் கொடுத்துள்ளாா்.

இந்தப் பகுதிகளில் பௌத்த மயமாக்கல் தீவிரமாக நடைபெறுகின்றது. இந்தப் பகுதிகளில் விகாரைகளை அமைக்கும் பணிகளைத் தொல்லியல் திணைக்களமும், காணிகளைப் பறிக்கும் செயற்பாடுகளை வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா போன்றனவும் செய்கின்றன. இதற்கு நில அளவைத்  திணைக்களம் ஒத்து ழைப்பு வழங்குகின்றது. இவை அனைத்தும் கொழும்பி லிருந்து வரும் கட்டளைக்கு அமைவாக நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவா்கள் முல்லைத்தீவு மக்களை அப் றப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இதனைச் செய்துவருகின்றாா்கள் என்பதை நான் நேரடியாக பாா்த்த அளவில் – நான் கேட்ட அளவில்  செல்லக்கூடியதாக இருக்கின்றது. இவை தொடர்பாக எவ்வாறான கட்சி சார்பாக எவ்வாறான நடவடிக்கை முன் னெடுக்கப்பட்டுள்ளது?

இந்த விவகாரம் தொடா்பாக நான் கட்சித் தலைவா்களுக்கு அறிவித்திருக்கின்றேன். இது தொடா்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகளை சுமந்திரன் முன்னெடுத்திருந்தாா். இதற்குத் தேவை யான ஆவணங்கள் இல்லாமையால் அந்த முயற்சி தாமதமடைந்துகொண்டு செல்கின் றது. சுமந்திரன் எம்.பி.யும் சிறிதரன் எம்.பி.யும் இந்த விடயத்தில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கின்றாா்கள். ஆனால், அதன் பலன் இன்னும் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் தமிழ்க் கட்சிகளின் தலை வா்களுக்கு இது தொடா்பாக நான் அறியத் தந்திருக்கின்றேன்.

இந்தத் திட்டம் – மகாவலி திட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகவா இருக்கின் றது? நான் ஏற்கனவே சொன்னது போல,  இந்தத் திணைக்களங்களுடன் மகாவலி திட்டமும் இணைந்துதான் இந்த செயற்பாடுகளை மேற் கொள்கின்றன. இவா்கள் இதனை மாவட்ட செயலகத்துக்கோ, பிரதேச செயலகத்துக்கேத தெரியாமல் இரகசியமாக வந்து காணி அபகரிப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றாா்கள். இங்கு இரண்டு விதமான செயற்பாடுகள் இப்போது முன்னெடுக்கப்படுகின்றன. ஒன்று காணி அபகரிப்பு. இரண்டு பௌத்த மயமாக்கல்.

Exit mobile version