Home செய்திகள் திருகோணமலை- குடி நீர் இன்றித் தவிக்கும் கிராம மக்கள்

திருகோணமலை- குடி நீர் இன்றித் தவிக்கும் கிராம மக்கள்

குடி நீர் இன்றித் தவிக்கும் கிராம மக்கள்

திருகோணமலை-குடி நீர் இன்றித் தவிக்கும் கிராம மக்கள்: திருகோணமலையின்   கிராம பகுதிகளில்  வாழும் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நீர் விநியோகமானது,  வழங்கப்படும் நாட்களில் சரியாக கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நீர் விநியோகிக்கப்படுகிறது.   சில நேரங்களில்  நீர் விநியோகிக்கப்படுவதில்லை. அதனால்  எமது அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் வாழ்கின்றோம்.

கன்னியா, ஓசில், போன்ற கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழத்தில் உள்ளதனால்   கிணறுகளும் அமைக்க முடியவில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கிணறுகளிலும் நீர் வற்றிவிட்டது.  இதனால் குடி நீர் கிடைப்பதில்  பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றோம்.

இது தொடர்பில் பல முறை    நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “நீர் விநியோகிக்கப்படும் நேரங்களிலாவது எல்லோருக்கும் கிடைக்கத்தக்க வகையில் நீரை விநியோகித்தால் அல்லது அதற்கு தக்க நடவடிக்கைகளை எடுத்தால் மிகவும் நல்லது என்பதே  மக்களின் கோரிக்கையாகும் என்றனர்.

Exit mobile version