Tamil News
Home செய்திகள் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும், அவர்கள் தங்களது கடமைகளை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும், ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் போன்ற விடயங்களை வலியுறுத்தி, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் “புதிய சட்டம் கருத்து சுதந்திரத்தின் சாவு மணி, பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட நாட்டை ஜனநாயக நெருக்கடிக்குள்ளும் தள்ளாதீர், நல்லாட்சிக்கே சட்டத்தை உருவாக்குங்கள் அடக்கி ஒடுக்க உருவாக்காதீர்கள்.” போன்ற பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

Exit mobile version