Home செய்திகள் வவுணதீவு இளைஞன் மீதான தாக்குதல் : காவல்துறையினர் பொறுபற்ற விதத்தில் பதில்- இரா.சாணக்கியன்

வவுணதீவு இளைஞன் மீதான தாக்குதல் : காவல்துறையினர் பொறுபற்ற விதத்தில் பதில்- இரா.சாணக்கியன்

வவுணதீவு இளைஞன் மீதான தாக்குதல்

அண்மையில் வவுணதீவு இளைஞன் மீதான தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினருக்கே காவல் துறையினரால் அலட்சியமான பதில் எனில், சாதாரண பொது மக்களின் நிலை என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி யெழுப்பியுள்ளார்.

கடந்த 05ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனை  பார்வையிடச் சென்று அவரின் விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அவர், தாக்குதலுள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான காவல்துறை விசாரணைகள் சம்மந்தமாக வவுணதீவு காவல் நிலையத்திற்கும் சென்று வினவியிருந்தார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் வவுணதீவுப் காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரியைச் சந்தித்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 05ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் ரூபன் என்ற இளைஞர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில், விசாரணைகள் எவ்விதம் முன்னெடுக்கப்படுகின்ற என்பது தொடர்பில் வவுணதீவு காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரியிடம் கோரிய போது இது தொடர்பில் தன்னால் எவ்விடயங்களும் சொல்ல முடியாது என  தெரிவிதுள்ளார்.

ஒரு பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரி சொல்லும் பதிலா இது. கடந்த 05ம் திகதி நடந்த சம்பவம் தொடர்பில் 17ம் திகதி வரையிலும் எந்தத் தகவலும் சொல்ல முடியாது என்றால் மக்கள் எவ்வாறு காவல்துறையை நம்புவது.

காவல்துறையினர் மக்களை இவ்வாறாகக் கையாள முனைந்தால் இந்த நாட்டில் இதற்கு மேலும் தமிழ் மக்கள் வாழ முடியாத நிலைமையே ஏற்படும்” என்றார்.

Exit mobile version