Home செய்திகள் மன்னார் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு முன்னெடுப்பு

IMG 20210713 090703 மன்னார் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு முன்னெடுப்பு

மன்னார் மாவட்டம்  சிறப்பு கண்காணிப்பில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது என மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று  நடை பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

“மன்னார் மாவட்டத்தில் தற்போது தடுப்பூசிகள் வழங்கும் மூன்றாவது கட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில்  படையினரால் விநியோகிக்கப் பட்ட சுமார் 5000 சினோபாம்  தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர் களுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்ட  அரச உத்தியோகத்தர் களுக்கும் வழங்கப்பட்டது.

இதேவேளை கடந்த வெள்ளிக் கிழமை எமக்கு கிடைக்கப் பெற்ற 20,000 பைசர் தடுப்பூசிகளில் 19 ஆயிரத்து 500 வரையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள தடுப்பூசிகள் இன்றைய தினம் வழங்கப்பட இருக்கின்றது. இந்த தடுப்பூசிகள் யாவும் அரசாங்கத்தால் செப்டம்பர் மாதம் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், இந்திய மீனவர்களோடு தொடர்புபடுகின்ற மன்னார் மீனவர்களால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்காக மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் எமக்கு மேலும் 22,230 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றின் விநியோகம் நாளையில் இருந்து ஆரம்பமாகும்.

இவை மன்னார் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடம் பெற்றவர்கள் 30 வயதுக்கு மேற்பட்ட  எவரும் எந்த நிலையத்திலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம். இதே வேளை இரண்டாவது மூன்றாவது நிலையை கடந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் ஒரு வயது குழந்தைகளை கொண்டுள்ள தாய்மாருக்குமான தடுப்பூசி வழங்கும் செயல் முறை எதிர்வரும் வாரத்தில்  ஆரம்பிக்கப் படவுள்ளது.

பொது மக்களுக்கு வழங்கும் தடுப்பூசி நிலையங் களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளத் தேவையில்லை. இவர்களுக்கும் விசேட நிலையங்களில் எதிர் வரும் வாரமளவில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மன்னர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி வினோதன் அவர்கள் தெரிவித்தார்.

இதே வேளை இதுவரையில் மன்னாரில் மொத்தம்  899  கொரோனா நோயாளர்கள்  அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவர்களில் இந்த மாதம் 90 பேரும்  இந்த வருடம் இதுவரையில் 882 அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version