சிங்கப்பூர்: நிரந்தரவாசியாவதற்கு தடுப்பூசி கட்டாயம் தேவை

தடுப்பூசி கட்டாயம் தேவை

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யா­வ­தற்­கும் வேலை அனு­மதி அட்­டை­கள், நீண்­ட­கால குடி­நு­ழைவு அட்­டை­க­ளுக்­கும் விண்­ணப்­பம் செய்­ப­வர்­களுக்கு கொவிட்-19 தடுப்பூசி கட்டாயம் தேவை  என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் புதிய விதி­முறை அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரும். வேலை அனு­மதி அட்­டை­யைப் புதுப்­பிப்­ப­வர்­களும் தடுப்­பூசி  போட்­டி­ருக்க வேண்­டும்.

இருப்­பி­னும், 12 வய­தும் அதற்­கும் குறை­வான சிறு­வர்­களும் மருத்­துவ அடிப்­படையில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளத் தகுதி பெறா­த­வர்­களும் இதற்கு விதிவிலக்கு.இந்­தப் புதிய விதி­முறை குறித்து கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

Tamil News