Home உலகச் செய்திகள்  ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைத் தளபதி பதவி விலகல்

 ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைத் தளபதி பதவி விலகல்

download 6  ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைத் தளபதி பதவி விலகல்

வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி தன்னுடைய பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஜெனரல் ஆஸ்டின் “ஸ்காட்” மில்லர் பதவியில் இருந்து விலகி, தனது பொறுப்புகளை கீழ்நிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததையடுத்து பிராந்தியக் கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் வசம் சென்றிருக்கின்றன.

பிரிட்டன் உள்ளிட்ட பிற நேட்டோ நாடுகளின் படைகளும் பைடன் விதித்த காலக்கெடுவுக்கு முன்னரே தங்களது படைகளை திரும்பப் பெற்றுவிட்டன.

மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறியிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாலிபன் படையினர் முன்னேறி வருகின்றனர்.

திங்கள்கிழமை நடந்த எளிமையான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பொறுப்புகளை இரு அமெரிக்க ஜெனரல்களிடம் ஒப்படைத்தார். அவர்களில் ஒருவர் புளோரிடாவில் இருந்தபடி வெளிநாட்டில் அமெரிக்கப் படைகளை வழிநடத்துபவர். மற்றொருவர் படை விலக்கலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகும் சுமார் 650 வீரர்களுக்கு தளபதியாக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version