அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்கா- விமானமும் உலங்கு வானூர்தியும் மோதி விபத்து: 19 பேரின் உடல்கள் மீட்பு

அமெரிக்கா- விமானமும் உலங்கு வானூர்தியும் மோதி விபத்து: 19 பேரின் உடல்கள் மீட்பு

அமெரிக்காவின் வோஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, அமெரிக்க இராணுவ  உலங்கு வானூர்தியுடன் நடு வானில் மோதி, ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இதுவரை 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற இந்தப் பயணிகள் விமானம், அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியில் இருந்து புறப்பட்டது. இதில் 60 பயணிகளும் நான்கு விமான பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

அதே நேரம், விபத்தில் சிக்கியது சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற இராணுவ உலங்கு வானூர்தி என்றும் அது வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டதாகவும் என்று அமெரிக்க இராணுவம் உறுதி செய்துள்ளது.

Exit mobile version